Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: போதுமான கிரிக்கெட் விளையாடவில்லையா? 20 ஆண்டுகள் ஓய்வே எடுத்ததில்லை.. விராட் கோலி அதிரடி

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. குறிப்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாதது இதற்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய விராட் கோலி, கடந்த 15 ஆண்டுகளாக தாம் எந்தவித ஓய்வும் எடுக்காமல் விளையாடி வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய விராட் கோலி, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடந்த 15, 20 ஆண்டுகளாக நான் எவ்வளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.

Virat kohli

இது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஓய்வு இன்றி நான் தொடர்ந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி இருக்கின்றேன். அது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கின்றேன். அதுவும் கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதுவும் ஐபிஎல் தொடரையும் இணைத்தால் ஓய்வே எங்களுக்கு கிடையாது.

தற்போது எங்களுக்கு கிடைத்த ஓய்வு மனதை புத்துணர்வு ஆக்கி இருக்கின்றது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் உடல் தகுதியை அதிகரித்திருக்கின்றோம். இதற்கு முன்பு இப்படி நான் ஃபிட்டாக இருந்தது இல்லை என்று நான் உணர்கின்றேன். சில மாதங்கள் கழித்து விளையாடும்போது கொஞ்சம் அனைத்தும் புதிதாக இருக்கும்.

ஆனால் மனதளவில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். உடலளவில் அதற்கு தயாராக தான் நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். என்னுடைய உடலும், ரிப்லெக்ஸ் சரியாக இருந்தால் எனக்கு போட்டி தொடர்பான விழிப்புணர்வும் இருக்கும் என்று தெரியும்.
என்னுடைய வாழ்க்கையை நான் இப்படி தான் வாழ்வேன். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆஸ்திரேலியக்கு வந்த பிறகு வலைப்பயிற்சியில் நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

இதுவரை அனைத்துமே நன்றாக தான் நடந்திருக்கின்றது. இந்த ஐந்து மாதங்கள் நான் வீட்டில் குடும்பம் மற்றும் குழந்தை என மகிழ்ச்சியாக இருந்தேன். வாழ்க்கையில் இந்த பகுதியை நான் சந்தோஷமாக கழிக்கின்றேன். ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி. இங்கு கடுமையான கிரிக்கெட் எதிரணியால் விளையாடப்படும். இதனால் ஆஸ்திரேலியா மீது எனக்கு எப்போதுமே தனி மதிப்பு மரியாதை இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, October 19, 2025, 10:18 [IST]
Other articles published on Oct 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+