அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும்.
இந்த சூழலில் இந்திய அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமாகும். பெர்த் டெஸ்ட் போட்டியில் கூட விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது இருக்கும் இந்திய அணியிலே விராட் கோலி தான் அதிக ரன்களும் அனுபவம் கொண்ட வீரராக விளங்குகிறார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக அடிலெய்டில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது விராட் கோலி காலில் கட்டு போட்டுக்கொண்டு இருந்தார்.
இதன் மூலம் விராட் கோலிக்கு காலில் காயும் ஏற்பட்டது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இந்த சூழலில் அவர் காலில் கட்டுடன் நடக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனால் விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சூழலில் காலில் கட்டு இருந்தாலும் விராட் கோலி பில்டிங் பயிற்சியில் ஈடுபட்டது ஓரளவுக்கு ரசிகர்களுக்கு மன நிம்மதியை கொடுத்தது. எனினும் இது நீண்ட தொடர் என்பதால் விராட் கோலியின் காயம் மேலும் அதிகமாகாமல் இருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
விராட் கோலி அடிலெய்ட் மைதானத்தின் ரெக்கார்டை வைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு இன்னிங்சில் விளையாடிய விராட் கோலி 509 ரன்கள் அடித்திருக்கிறார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதம் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் அடிலெய்ட் மைதானத்தில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.