Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி தான் ஃபேவரைட்.. சாம் கோன்ஸ்டாஸ் அளித்த பதில்.. "கிங்" செயலால் நொந்துபோன ரசிகர்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் நேரடி மோதலில் விராட் கோலி ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே இந்திய அணியில் தனக்கு பிடித்த வீரர் விராட் கோலி தான் என்று சாம் கோன்ஸ்டாஸ் அளித்திருக்கும் பதில் இந்திய ரசிகர்களையும் சோகமடைய செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக ரன்களை குவித்தார்.

ind vs aus virat kohli sam konstas vs

இந்திய அணியின் பும்ராவின் ஒரே ஓவரில் 18 ரன்களை விளாசியது ஆச்சரியத்தை கொடுத்தது. இதனால் 19 வயதிலேயே சாம் கோன்ஸ்டாஸின் ஆட்டம் ஆஸ்திரேலியா ரசிகர்களையும், முன்னாள் வீரர்களையும் கவர்ந்தது. சிறப்பாக ஆடிய அவர் 49 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியாக 65 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

சாம் கோன்ஸ்டாஸ் விளையாடிய போது, அவரை விராட் கோலி நேரடி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஓவர்களுக்கு இடையில் பந்தை கையில் எடுத்து மறுமுனைக்கு நகர்ந்த விராட் கோலி, சாம் கோன்ஸ்டாஸின் தோளில் வேண்டுமென்றே இடித்து சென்றார். அப்போது சாம் கோன்ஸ்டாஸ் டென்ஷனில் விராட் கோலியை நோக்கி வாயைவிட, அவரும் பதிலுக்கு வார்த்தைகளை விட்டார்.

இதனால் நடுவர்கள் வந்து சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர். இதன்பின் 19 வயதாகும் அறிமுக வீரரை விராட் கோலி இப்படி செய்யலாமா என்ற ஆஸ்திரேலியா வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். ஆனால் 22 வயதில் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய போது அவர்கள் என்னவெல்லாம் செய்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறிய பின் சாம் கோன்ஸ்டாஸ் பேசுகையில், அச்சமின்றி விளையாட வேண்டும் என்று மட்டுமே கம்மின்ஸ் கூறினார். களத்தில் விராட் கோலியுடன் மோதியது சாதாரண விஷயம் தான். அந்த நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்துவது சாதாரணமான விஷயமல்ல என்று தெரிவித்தார்.

இதனிடையே எல்இடி ஸ்க்ரீனில் சாம் கோன்ஸ்டாஸிற்கு பிடித்த விஷயங்கள் குறித்த சில தகவல்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் உங்களுக்கு பிடித்த இந்திய வீரர் யார் என்ற கேள்விக்கு, விராட் கோலி தான் பிடித்த வீரர். அவர் செய்த விஷயங்கள் அனைத்தும் மிரள வைக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் சாம் கோன்ஸ்டாஸின் பதிலால் விராட் கோலி ரசிகர்களும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Thursday, December 26, 2024, 12:13 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+