Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி படைக்க போகும் 5 சாதனைகள் பட்டியல்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார். இதற்காக இந்திய அணியுடன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, மொத்தமாக 1327 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் 5 சதம் அரை சதம் அடங்கும். விராட் கோலியின் சராசரி 51 என்ற அளவில் இருக்கின்றது. 36 வயதான விராட் கோலி கடைசியாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடி 5 போட்டிகளில் 218 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும்.இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி ஐந்து சாதனைகள் படைக்க வாய்ப்பு இருக்கிறது.

Virat Kohli

அதில் விராட் கோலி மொத்தமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதம் அடித்திருக்கிறார். இதில் அந்நிய மண்ணில் 27 சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் விராட் கோலி மூன்று சதம் அடித்தால் அந்நிய மண்ணில் அதிக ஒரு நாள் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்வார்.

சச்சின் 29 சதம் அடித்துள்ள நிலையில் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளார். விராட் கோலி இதுவரை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 1325 Fours, 152 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மொத்தம் 1476 பவுண்டரிகளை அடித்திருக்கிறார்.மேலும் அவர் 24 பவுண்டரிகளை அடித்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 1500 பவுண்டரிகளை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இந்த பட்டியலில் சச்சின், ஜெயசூர்யா ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இதுபோன்று ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி படைப்பார். சச்சின் டெண்டுல்கர், டெஸ்டில் 51 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதம் அடித்துள்ளார்.

இதனால் ஒரே பார்மட்டில் 52 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை கோலிக்கு சேரும். விராட் கோலி டெஸ்ட் போட்டி நீங்கலாக ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் சேர்த்து 18,369 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வெறும் 68 ரன்களை விராட் கோலி அடித்தால் வெள்ளை நிற பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதே போன்று ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி வெறும் 54 ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த சங்ககாராவின் சாதனையை முறியடித்து விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடிப்பார். கோலி 302 போட்டிகளில் 14181 ரன்கள் அளித்துள்ள நிலையில் சங்ககாரா 404 போட்டிகளில் 14234 ரன்கள் அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் அடித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்

Story first published: Thursday, October 16, 2025, 15:11 [IST]
Other articles published on Oct 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+