For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: இன்னும் 1 சதம் போதும்.. சச்சினின் பிரம்மாண்ட ரெக்கார்டுக்கு குறி வைத்த விராட் கோலி

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் இமாலய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார்.

அது ஆஸ்திரேலிய மண்ணில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக அவரது பத்தாவது சதமாக அமைந்தது. மேலும், அந்த சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்து கொண்டார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் 65 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் அடித்து இருக்கிறார். விராட் கோலி தற்போது 44 இன்னிங்ஸ்களில் 9 சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில், இந்தத் தொடரில் மீதம் உள்ள நான்கு போட்டிகளில் விராட் கோலி சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலி நல்ல பேட்டிங் ரெக்கார்டு வைத்துள்ளார். அந்த மைதானத்தில் அவரது பேட்டிங் சராசரி 63 ஆக உள்ளது. எனவே, அவர் அந்த போட்டியில் சதம் அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி விராட் கோலி சதம் அடித்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை படைப்பார்.

இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா 8 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். மைக்கேல் கிளார்க் 7 சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இது மட்டும் இன்றி இந்த தொடரில் விராட் கோலி மேலும் இரண்டு சதங்கள் அடித்தால் டான் பிராட்மேனின் 76 வருட ரெக்கார்டை முறியடிப்பார். வெளிநாடு ஒன்றில் அதிக டெஸ்ட் சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டான் பிராட்மேன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இங்கிலாந்து மண்ணில் 19 போட்டிகளில் 11 சதங்கள் அடித்து இருக்கிறார்.

விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 43 போட்டிகளில் இதுவரை 10 சதம் அடித்து இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் மேலும் இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில் டான் பிராட்மேனின் 76 வருட சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.

Story first published: Tuesday, December 3, 2024, 8:36 [IST]
Other articles published on Dec 3, 2024
English summary
IND vs AUS: Virat Kohli need one century to break Sachin Tendulkar record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+