Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காற்று பலமா இருக்கும்! பிரிஸ்பேன் டெஸ்டுக்காக கோலி பிரத்யேக பயிற்சி

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடர் சமனில் உள்ள நிலையில் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பேட்டிங்கில் விராட் கோலி அதிக அளவு ரன்களை குவிக்க வேண்டும். இந்த சூழலில் பெர்த் டெஸ்ட் போட்டியில் அபாரமாக சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்சில் 7 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 12 ரன்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.

ind vs aus virat kohli india vs australia vs

இந்த நிலையில் விராட் கோலி பயிற்சி முறையில் சில மாற்றம் தெரிந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹர்பஜன் சிங், விராட் கோலியுடன் நான் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். விராட் கோலி முன் காலை வைத்து தான் பேட்டிங் செய்வார். ஆனால் பிரிஸ்பேனில் உள்ள ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் விராட் கோலி பயிற்சி முறையில் சில மாற்றம் தெரிந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹர்பஜன் சிங், விராட் கோலியுடன் நான் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். விராட் கோலி முன் காலை வைத்து தான் பேட்டிங் செய்வார். ஆனால் பிரிஸ்பேனில் உள்ள ஆடுகளத்தின் பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஹைடின், ஸ்ரீவாக் போன்ற வீரர்கள் எல்லாம் பின் கால்களை வைத்து தான் விளையாடுவார்கள். இதன் மூலம் பந்தின் பவுன்சை சமாளிக்க முடியும். பேட்டிங்கில் பின் காலை வைத்து விளையாடினால் மட்டுமே இங்கு ரன்கள் சேர்க்க முடியும். இதனால் தான் விராட் கோலி பிரத்யேகமாக பயிற்சி செய்து வருகிறார். இந்த பயிற்சி முகாமில் வெளியான வீடியோ குறித்து நான் கண்டேன். அதில் விராட் கோலி பல பந்துகளை பின் காலில் நின்றுதான் அடித்திருக்கிறார்.

பயிற்சியில் நான் பார்த்தவரை விராட் கோலி பல பந்துகளை அடிக்காமல் விட்டு பயிற்சி எடுத்திருக்கிறார். ஏனென்றால் பிரிஸ்பேனில் உள்ள ஆடுகளம் வித்தியாசமாக இருக்கும். பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்று கோலிக்கு தெரியும். இதற்கு தகுந்தார் போல் விராட் கோலி பயிற்சி செய்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியை எனக்கு நன்றாக தெரியும். தற்போது ஏற்பட்ட பின்னடைவுக்காக அவர் மீண்டும் பெரிய ரன்களை குவித்து கம்பேக் கொடுப்பார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 10, 2024, 19:16 [IST]
Other articles published on Dec 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+