Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய மனுஷனா நடந்துக்குங்க விராட் கோலி.. சாம் கோன்ஸ்டாஸ் விவகாரம்.. உண்மையை உடைத்த ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: இந்தியா அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-க்கு எதிராக செய்த செயல் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்து போய் உள்ளனர். இந்திய ரசிகர்களும் "இதெல்லாம் அவசியமா? கோலி செய்தது சரி இல்லை." என சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் துவக்க வீரராக களம் இறங்கினார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

அவர் பும்ராவை குறிவைத்து ரன் சேர்த்தார். பும்ராவின் ஓவர்களில் மட்டும் 33 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். 52 பந்துகளில் அரை சதம் கடந்தார் சாம் கோன்ஸ்டாஸ். அவர் அதிக நம்பிக்கையுடன் அதிரடியாக ஆடி வந்த நிலையில் விராட் கோலி வேண்டுமென்றே அவரை இடித்தார். 10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது விராட் கோலி வேண்டும் என்றே தான் நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அம்பயர்கள் இடை மறித்து இருவரையும் சமாதானம் செய்தனர். முதலில் சாம் கோன்ஸ்டாஸ் வேண்டும் என்று இடித்து இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் தொடரை ஒளிபரப்பி வரும் ஆஸ்திரேலியாவின் சேனல் 7 ரீப்ளேவில் உண்மை என்ன? என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியது. விராட் கோலி தான் வேண்டும் என்று தான் நடந்து சென்ற பாதையை மாற்றி சாம் கோன்ஸ்டாஸ்-ஐ இடித்து இருக்கிறார். இதை அடுத்து மூத்த வீரரான விராட் கோலி இதுபோன்ற செயலை செய்யலாமா? என இந்திய ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுபுறம் ஆஸ்திரேலியா ரசிகர்களோ, விராட் கோலியை தடை செய்ய வேண்டும். அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 26, 2024, 7:21 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+