Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 100 போட்டிகளில் ஆடினார்

பிரிஸ்பேன்: இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் செய்து இருக்கிறார்.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 110 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருந்தார். அதுவே இன்றளவும் சர்வதேச அளவில் சாதனையாக உள்ளது. வேறு எந்த அணியின் வீரரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் ஆடி இருக்கவில்லை. தற்போது சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 சர்வதேச போட்டிகளில் ஆடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகள், 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவர் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார். அடுத்து சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடுவார்.

இந்த நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் அவர் சச்சின் சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 110 சர்வதேச போட்டிகளுக்கும் அதிகமாக விளையாடிய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்ய வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் விராட் கோலிக்கு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்மாண்ட் ஹேனஸ் இருக்கிறார். அவர் 97 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் தோனி இருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 82 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 14, 2024, 8:12 [IST]
Other articles published on Dec 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+