Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய தொடரில், இந்த இந்திய வீரர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார்.. பார்த்தீவ் பட்டேல் கணிப்பு

மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக தான் இந்த தொடரில் களம் இறங்குகிறார்.

அதேபோன்று விராட் கோலியும் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலம் இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடுகின்றனர். கடந்த ஐபிஎல் போட்டிக்கு பின்பு இருவரும் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.

Ind vs Aus

இதனால் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ரன்களை குவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல ஆஸ்திரேலிய மண்ணில் இருவரும் அதிக அளவு ரன்களை சேர்த்து இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது கேள்வியே இருவரும் பல மாதங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க போகிறார்கள். இதனால் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஃபார்முக்கு வர கொஞ்சம் நேரம் ஆகலாம். நீங்கள் எவ்வளவு தான் பயிற்சி செய்து விட்டு சென்றாலும் இந்திய அணிக்காக விளையாடும்போது பல விஷயங்கள் உங்களுக்கு மாறும்.ரோஹித் சர்மா தன்னுடைய உடல் தகுதியில் தீவிரமாக உழைத்து இருக்கிறார்.

விராட் கோலி எப்போதுமே தன்னுடைய உடல் தகுதியை சிறப்பாக வைத்திருப்பார். இதனால், அது பற்றி எந்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. ஆனால் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு என்ன ஒரு தகுதி வேண்டும்.அதை மேட்ச் ஃபிட்னஸ் என்று கூறுவார்கள்.
எனவே களத்தில் விளையாடும்போது தான் இருவருக்கும் அது இருக்கிறதா என்பது குறித்து தெரிய வரும்.

மைதானம் மற்றும் ரசிகர்கள் சத்தம் என அனைத்துமே இருவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் கேள்வியே மேட்ச் பிட்னஸ் குறித்து தான் இருக்கின்றது. ஆனால் எப்போதெல்லாம் இதுபோல் சந்தேகங்கள் எழுப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் விராட் கோலி தன்னுடைய பேட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இப்போது நான் ஒரு கணிப்பை வெளியிடுகிறேன். விராட் கோலி தான் இந்த மூன்று ஒரு நாள் போட்டியில் கொண்ட தொடரில் ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்று அவர் கூறியுள்ளார். விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 29 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸில் விளையாடி 1327 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 51 என்ற அளவில் இருக்கின்றது.

Story first published: Monday, October 13, 2025, 22:13 [IST]
Other articles published on Oct 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+