Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

147 டெஸ்ட் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத மாபெரும் சாதனை.. வாஷிங்டன், நிதிஷ் புதிய ரெக்கார்டு

மெல்போர்ன்: 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேன்களும் செய்யாத மாபெரும் சாதனையை இந்திய அணியின் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் செய்துள்ளனர். எட்டாம் வரிசை மற்றும் ஒன்பதாம் வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்ததன் மூலம் இந்த சாதனையை அவர்கள் செய்து இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒன்பதாம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களும், எட்டாம் வரிசையில் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களும் சேர்த்தனர். இவர்கள் இருவரது ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தில் இருந்து மீண்டதுடன் மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்து இருந்தது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்து இருந்தார். அவர் 162 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் சேர்த்து இருந்தார். அதே போல, நிதிஷ் குமார் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 176 பந்துகளை சந்தித்து 105 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்டாம் வரிசையில் இறங்கிய வீரரும் ஒன்பதாம் வரிசையில் இறங்கிய வீரரும் ஒரே இன்னிங்ஸில் 150 பந்துகளுக்கும் அதிகமாக சந்தித்து புதிய வரலாறை படைத்து உள்ளனர். இதற்கு முன் இது போன்ற நிகழ்வு எப்போதும் நடந்ததில்லை. இவர்கள் இருவரும் இந்திய அணியை மீட்டதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறை படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. நிதிஷ் குமார் அடித்த சதம், ஜெய்ஸ்வாலின் 82 ரன்கள், வாஷிங்டன் சுந்தரின் 50 ரன்கள் ஆகியவற்றின் மூலம் பதிலடி கொடுத்து இருக்கும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளன. இந்திய அணி நான்காம் நாள் அன்று கடைசி விக்கெட்டை இழக்கும் முன் விரைவில் ரன் சேர்க்க வேண்டும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, December 28, 2024, 15:03 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+