Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

36 ரன்களில் ஆல் அவுட் ஆனார்கள்.. இம்முறை கண்டிப்பாக இந்தியாவை வீழ்த்துவோம்.. ஆஸி.வீரர் திமிர் பேச்சு

சிட்னி : வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணி இந்தியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் ஆகியும் ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி தொடரை வெல்ல முடியவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடரை வென்று தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

cricket australia cricket team ind vs aus virat kohli

இந்த நிலையில் இந்திய அணியை கண்டிப்பாக இம்முறை வீழ்த்துவோம் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேஸ் ஹேசல்வுட் கூறி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எங்களுடைய அணியில் சில வீரர்கள் இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தாதவர்கள் இருக்கிறார்கள்.

இதை சொல்லும் போதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இம்முறை இந்தியாவை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகம் எங்கள் அணியில் இருக்கிறது. குறிப்பாக சொந்த மண்ணில் நாங்கள் விளையாடும் போது அனைத்து தொடரையும் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.


கடந்த தொடரின் போது நாங்கள் அடிமைகளில் இந்தியாவை எதிர்கொண்ட போது 36 ரன்களில் சுருட்டினோம். இதனால் இம்முறையும் அதே மைதானத்தில் விளையாடும் போது நிச்சயம் எங்களுக்கு அது நம்பிக்கையை கொடுக்கும். சில பேர் நாங்கள் இந்தியாவின் இரண்டாம் தர அணியை தான் கடந்த முறை எதிர்கொண்டோம் என்று கூறுகிறார்கள்.

கடந்த தொடரின் போது நாங்கள் இந்தியாவை எதிர்கொண்ட போது 36 ரன்களில் சுருட்டினோம். இதனால் இம்முறையும் அதே மைதானத்தில் விளையாடும் போது நிச்சயம் எங்களுக்கு அது நம்பிக்கையை கொடுக்கும். சில பேர் நாங்கள் இந்தியாவின் இரண்டாம் தர அணியை தான் கடந்த முறை எதிர்கொண்டோம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, August 18, 2024, 20:01 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+