Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்திய ஸ்பின்னர்! பேட்டிங்கிலும் கலக்கி அபார ஆட்டம்

பிரிஸ்பேன் : 1967 - 68 ல் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் ஆரம்பித்து இந்திய மண்ணில் இருந்து விமானத்தில் அன்றைய மெட்ராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய அணியில் இந்த அனுபவ வீரர் இடம் பெற்று இருக்கவில்லை
தொடரில் டெஸ்ட் மேட்ச்சுக்கள் , முதல் தர ஆட்டங்கள் ஆட ஆரம்பித்த பிறகு, இந்த சூழல் பந்து வீசுபவர் காயம் காரணமாக இந்தியாவிற்கு திரும்பி விட்டார்.

அவருக்கு பதிலாக இந்த அனுபவ வீரர் நீண்ட விமானங்கள்
பயணத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய நாட்டு மண்ணில் காலடி வைத்தார்.
வந்தததும் வராததுமாக பிரஸ்பேன் மைதானத்தில் நடை பெற இருந்த 3 வது டெஸ்ட் அணியில் சேர்க்கப் பட்டு களம் கண்டார்.

border gavaskar trophy india vs australia test match cricket vs

இந்தியாவிற்கு திரும்பியவர் ஸ்பின் பவுலர் பி எஸ் சந்திரசேகர்.
அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவிற்கு
வர வழைக்கப் பட்டவர் முக்கியமாக, சிறப்பாக பேட்டிங் விளையாட கூடிய எம்.எல். ஜெயஸிம்ஹா . இவரை அங்கு வர வழைப்பதில் முக்கிய பங்கு ஆற்றியவர் கேப்டன் நவாப் பட்டோடி.

அந்த முடிவு சரி என்று தனது மிக சிறப்பான இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங்கிலும் நிரூபித்தார் எம் எல் ஜெயஸிம்ஹா.
இந்திய அணி இந்த குறிப்பிட்ட டெஸ்டில் வெற்றிப் பெறுவதற்கான எல்லா வகை உதவிகளையும் புரிந்தார் எம் எல்
ஜெயஸிம்ஹா

இந்த டெஸ்டில் எம் எல் ஜெயஸிம்ஹாவின் அபார ஆட்டம் கண்டவர்களை வியப்பில் ஆழ்த்தியது என்பது உண்மை.முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி எடுத்த ஸ்கோர் 379. டக் வால்டர்ஸ் 7 ரன்கள் இடை வெளியில் சதத்தை தவற விட்டார்.
93 ரன்கள்
( 7 பவுண்டரி கள்).
கேப்டன் பில் லாரி 64, பால் ஷியன் 58.

இந்திய அணியின் பவுலிங்கில் உமேஷ் குல்கர்னி, பிரசன்னா,
நட்கர்னி தலா 2 மற்றும் ருசி சுர்த்தி 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 279.கேப்டன் பட்டோடியும், எம் எல் ஜெயஸிம்ஹா வும் எடுத்த ரன்கள் தலா 74.

ருசி சுர்த்தி 52 எடுத்தார்.அவர்கள் பவுலர்கள் பிரீமன், கவுபர் தலா 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் பொழுது இந்திய ஆப் பிரேக் பவுலர் பிரசன்னா திறமையாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை கைப் பற்றினார்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 294.
அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள். இயன் ரெட் பாத் 79
டக் வால்டர்ஸ் 62*
பில் லாரி 45

395 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியது, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட.நான்காவது நாள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 177 / 4.
ருசி சுர்த்தி 55*, ஜெயஸிம்ஹா 5*

கடைசி முழ நாள் இருந்தது. வெற்றி பெற தேவையான ரன்கள் 220 க்கும் குறைவு தான்.

இரண்டு நாட் அவுட் ஆட்டக்காரர்களும் நம்பிக்கை ஊட்டினர், 4 நாள் முடிவில்.அபித் அலி 47, பட்டோடி 48 ரன்கள் குவித்தனர்.
கடைசி மற்றும் 5 ஆம் நாள் ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்புகளுடன் துவங்கியது. ரன்கள் கூட ஆரம்பித்தன. எம் எல் ஜெயஸிம்ஹா தனது அருமையான ஆட்டத்தை தொடர்ந்தார்.

மறு பக்கம் இந்திய அணி சில நேரம் தாக்கு பிடித்து விளையாடினாலும், விக்கெட்டுக்களை இழந்த வண்ணம் இருந்தது.சந்து போர்டே சிறப்பாக ஆடி 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.பெரும்பாலான மற்ற ஆட்டக்காரர்கள் ஒற்றை பட எண்ணில் ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை வெளிப் படுத்திய
எம் எல் ஜெய ஸிம்ஹா கடைசியாக அவுட் ஆனார். 9 பவுண்டரிகள் எடுத்த இவர் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் எடுத்தது 101 ரன்கள்.
இந்த டெஸ்டில் இவர் ஒருவர் மட்டுமே சதம் எடுத்தவர்.

இவ்வளவு சிறப்பாாக ஜெய சிம்ஹா ஆடியும் இந்திய கிரிக்கெட் அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.கவுப்பர் எடுத்த விக்கெட்டுக்கள்.4.
ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில்.வென்றது.
எதிர் பாராமல் அழைக்கப் பட்டு சுற்றுப் பயண த்தின் நடுவில் சென்று, போதிய ஓய்வு இல்லாமல் டெஸ்ட் விளையாடி அசத்தி தனது தனி முத்திரையை சிறப்பான பேட்டிங் மூலம் பதித்தார், எம் எல் ஜெய ஸிம்ஹா.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, November 28, 2024, 16:56 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+