Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: சிட்னி டெஸ்ட் போட்டி.. சர்ஃபராஸ் கான் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.. ஏன் தெரியுமா?

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. சிட்னி மைதானத்தின் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மிடில் ஆர்டரில் அவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அறிமுகமான சர்ஃபராஸ் கான், பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முழு திறமையையும் வெளிப்படுத்தினார். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று யாரையும் கண்டுகொள்ளாமல் சர்ஃபராஸ் கான் ஆடி 195 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ind vs aus sarfaraz khan shubman gill

இதன் மூலமாக எதிர்காலத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கான் மிகமுக்கியமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்பட்டது. அதேபோல் ஸ்பின்னர்களை அவர் எதிர்கொண்ட விதம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்டோர் ஸ்பின்னர்களுக்கு திணறி வரும் சூழலில், சர்ஃபராஸ் கான் ஸ்டம்ப் அவுட் செய்து விளாசி தள்ளுகிறார்.

அதேபோல் உயரமும் குறைவாக இருப்பதால், அவருக்கு ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கூடுதல் சாதகமாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டும் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுப்மன் கில் போன்ற டாப் ஆர்டர் வீரர்களே பெஞ்ச் செய்யப்பட்டுள்ளதால், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதான விஷயம் தான்.

ஆனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அதற்கு சிட்னி மைதானத்தின் பிட்ச் முக்கிய காரணம். கிட்டத்தட்ட இந்திய மைதானங்களை போல் கடைசி 3 நாட்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். கடந்த முறை கூட இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருந்தது.

மழை வரும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், கடந்த போட்டியை போல் நேதன் லயனிடம் இந்திய அணி சிக்கினால் மீண்டும் ஒரு தோல்வியை அடையும். அதேபோல் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு பின் இந்திய அணி ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதனால் சர்ஃபராஸ் கானின் திறமையை ஆஸ்திரேலியா மண்ணிலேயே சோதிக்க முடியும். இதன் மூலமாக அடுத்தக் கட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவனை கட்டமைப்பதற்கான ஒரு தெளிவும் தேர்வு குழுவினருக்கு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் கான் இதுவரை 371 ரன்களை விளாசி இருக்கிறார்.

Story first published: Wednesday, January 1, 2025, 19:33 [IST]
Other articles published on Jan 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+