Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் 4 ரன்கள் ஓடியும், பவுண்டரி தராத நடுவர்.. கேனத்தனம்! என்ன சார் உங்க ரூல்ஸ்?

மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் நான்கு ரன்களை ஓடியே எடுத்த நிலையில் அதற்கு நடுவர் பவுண்டரி தராதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கிரிக்கெட்டில் நம் பலருக்கும் தெரியாத பல அறிய விதிகள் இருக்கிறது. இந்த விதிகள் எதுக்கு இருக்கிறது? ஏன் எந்த லாஜிக்கும் இல்லை என்பதெல்லாம் குறித்து எதுவுமே யோசிக்க முடியாது.இப்படி ஒரு லாஜிக் படி தான் பவுண்டரி கணக்கை வைத்து இங்கிலாந்து உலக கோப்பையை வென்றதாக ஐசிசி அறிவித்தது.

Ind vs Aus - Why umpires didnot give boundary after shubman gill running 4 runs

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற காலத்திற்கும் உதவாத பல விதிகளை மாற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில் மூலம் இப்படி ஒரு விதி இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது.இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஆட்டத்தின் 8.1 வது ஓவரில் கேமரான் கிரீன் வீசிய பந்தை கில் அடித்தார். அந்த பந்து மைதானத்தின் தூரமான பகுதிக்கு சென்றது. அப்போது பந்து பௌண்டரியை தொடவிடாமல் ஆஸ்திரேலியா வீரர் அடம் சாம்பா அதை தடுத்து மீண்டும் பவுலருக்கு எறிந்தார்.

ஆனால் அதற்குள் கில் நான்கு ரன்களை ஓடியே எடுத்துவிட்டார். ஆனால் இதற்கு நடுவர் பவுண்டரி வழங்காமல் பந்து எல்லை கோட்டை தொடுவதற்கு முன் அடம் சாம்பா தடுத்தாரா ? இல்லையா? என்பது குறித்து பார்த்தனர். இது கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோரை குழப்பியது. ஏற்கனவே கில் நான்கு ரன்களை ஓடி எடுத்த பிறகு நடுவர் ஏன் பந்து எல்லைக்கோட்டை தொட்டதா இல்லையா என்று பார்க்கிறார் என்று கேள்வி கேட்டனர்.

இந்த ரீப்ளேவில் சாம்பா, பந்தை பவுண்டரிக்கு செல்வதற்கு முன்பே தடுத்து விட்டதால் அதற்கு நடுவர் பவுண்டரி வழங்கவில்லை. ஆனால் அதற்கு பதில் வெறும் நான்கு ரன்கள் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் இது கில் அடித்த பவுண்டரி கணக்கில் சேர்க்கவில்லை. உடனே கிரிக்கெட் வர்ணனையிலிருந்து சஞ்சய் மஞ்சுரேக்கர் நான்கு ரன்கள் தான் ஓடி எடுத்து விட்டாரே ஏன் பவுண்டரி கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்டார்.

அப்போதுதான் தெரிந்தது பவுண்டரி என்பது வேறு ஓடி ரன்களை எடுப்பது என்பது வேறு. பவுண்டரி என்றால் எல்லைக்கோட்டை பந்து கடப்பதை மட்டும்தான் குறிக்கும். இது நான்கு ரன்கள் மற்றும் ஆறு ரன்கள் மட்டும்தான் பௌண்டரிகள் மூலம் கிடைக்கும். ஆனால் நீங்கள் ஓடி எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அது பவுண்டரி கணக்கில் சேராமல் ஓடி எடுத்ததாக தான் சேரும் என்று கிரிக்கெட் புக் விதி கூறுவதாக ஹர்ஷா போக்லே விளக்கம் அளித்தார்.இது என்னடா கேனத்தனமாக இருக்கிறது என்று ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.

Story first published: Friday, September 22, 2023, 21:12 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+