பைனலிலும் ஆடுகள சர்ச்சை.. ஐசிசி நிர்வாகியை வீட்டுக்கு அனுப்பியதா பிசிசிஐ? உண்மையில் நடந்தது என்ன?
அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே பெறாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதை அண்டை நாட்டு ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மேலும் பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அரையிறுதியில் உருவாக்கப்பட்ட சர்ச்சை தான் இந்தியா ஆடுகளத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்றியது என்று கிளப்பி விட்டனர்.

ஆனால் இது குறித்து ஐசிசிஐ விளக்கம் அளித்து விட்டது. இந்த நிலையில் ஐசிசி யின் ஆடுகள பராமரிப்பு ஆலோசகர் ஆண்டி ஆட்கின்சென் அரையிறுதியில் ஆடுகளம் மாற்றப்பட்டிருப்பதாக கூறியதாகவும் அதனால் அவரை பிசிசிஐ தன்னுடைய பவரை பயன்படுத்தி ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியானது.
ஆன்டி ஆட்கின்சன் ஆலோசகராக செயல்பட்டால் இந்தியா தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை இறுதிப்போட்டியில் பயன்படுத்த முடியாது என்பதால் இந்த மாதிரி பிசிசிஐ செய்திருப்பதாக பல வெளிநாட்டு ரசிகர்களும் வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகளை கிளப்பியுள்ளன. ஆனால் இது தவறான செய்தியாகும்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐசிசி ஆண்டி ஆட்கின்சன் சொந்த ஊருக்கெல்லாம் போகவில்லை என்றும் அவர் இந்தியாவில் தான் இருக்கிறார் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஐசிசி உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் இருந்ததால் அவர் நேற்று அகமதாபாத்துக்கு வரவில்லை என்றும் இன்று அவர் அகமதாபாத்தில் ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
எந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவார் என்றும் கூறியிருக்கிறது. மேலும் இந்தியா நியூசிலாந்து மோதிய அரை இறுதி ஆட்டம் ஏற்கனவே விளையாடிய பிச்சில்தான் நடத்தப்பட்டது. இதுக்கு ஐசிசி விதியில் இடம் இருக்கிறது. ஆனால் இது பற்றி தெரியாமல் ஆட்கின்சென் கூறியது இந்தியாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் உலககோப்பை தொடர் முடிந்தவுடன் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Saturday, November 18, 2023, 14:05 [IST]
Other articles published on Nov 18, 2023


Click it and Unblock the Notifications