2வது ரன் ஓட முடியாதா? குல்தீப் யாதவை கடுப்பாகி கத்திய முகமது சிராஜ்.. காரணமே இது தான்
அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 241 இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் இந்தியா தொட்டாலும் அதன் பிறகு ஆடுகளம் மிகவும் தோய்வாக மாறியது.
இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க கடுமையாக தடுமாறினர். எவ்வளவு அடித்தாலும் பந்து நகரவே இல்லை. அதையும் மீறி அடித்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் சீறிப்பாய்ந்து பில்டிங்கை செய்து விடுகிறார்கள்.

இதனால் இந்திய அணி ஒவ்வொரு ரன் எடுக்கவும் மிகவும் கஷ்டப்பட்டது. இந்த நிலையில் இறுதி போட்டி போன்ற ஆட்டங்களில் ஒவ்வொரு ரன்னும் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் இன்று இந்திய அணி கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்தது. ஆனால் குல்திப் யாதவ் இரண்டாவது ரன் ஓடும் எண்ணத்தில் இல்லாமல் நிற்க, சிராஜ் சொன்னவுடன் தான் மீண்டும் ஓடத் தொடங்கினார்.
இதன் காரணமாக அவர் ரன் அவுட் ஆனார். இதனால் இந்தியாவுக்கு கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் கடுப்பான முகமது சிராஜ், குல்தீப் நோக்கி கத்தி திட்டினார். ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால். இந்த மைதானத்தில் சேசிங் செய்வதும் மிகவும் கடினம். இதனால் தான் சிராஜ் கோபப்பட்டு திட்டினார்.
மேலும் இந்த தொடர் முழுவதும் இந்திய அணி பேட்டிங் விளையாடும்போது கூலாக தான் இருந்தார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் ஆடுகளம் இவ்வாறு அமைக்கப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ரன் குவிக்கும் மைதானத்தில் விளையாடிவிட்டு கடைசியில் இது போன்ற ஒரு ஆடுகளத்தில் இறுதிப்போட்டி விளையாடுவது என்பது மிகவும் கடினம்தான்.இந்த 241 என்ற இலக்கு தற்போது ஆஸ்திரேலியாவுக்கும் துரத்துவதற்கு மிகவும் கடினம் தான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Story first published: Sunday, November 19, 2023, 18:19 [IST]
Other articles published on Nov 19, 2023


Click it and Unblock the Notifications