Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி! நாங்க ஒன்றும் இங்கிலாந்து கிடையாது! இந்தியா விரித்த வலையில் சிக்கிய ஆஸ்திரேலியா

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாருமே எதிர்பாராத வகையில் வலுவான நிலையில் இருக்கின்றது. உலகில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பெர்த் மைதானம் முதன்மை ஆனதாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 150 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்த நிலையில், இந்திய அணியின் பும்ரா அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

yashasvi jaiswal border gavaskar trophy india vs australia test match

இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேஎல் ராகுலும் ஜெய்ஸ்வாலும் மைதானத்தில் நங்கூரம் போட்டு அப்படியே நின்று விட்டனர்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 201 ரன்கள் குவித்தது. கே எல் ராகுல் 176 பந்துகளை எதிர் கொண்டு 77 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஜெய்ஸ்வால் 25 பந்துகளை எதிர் கொண்டு சதம் விளாசினார் முதல் இன்னிங்சில் இந்திய அணியை 150 ரன்கள் சுருட்டியது போல் இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணி விரைவில் ஆட்டம் இழந்த விடும் என ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்தியா அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. அதாவது ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம் அதீத வெப்பம் காரணமாக காய்ந்து விட்டது. இதனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடிய ரன்களை குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய வீரர்கள் நினைத்தனர்.

ஏனென்றால் இந்திய அணி கடந்த சில போட்டிகளாக இங்கிலாந்தின் ஸ்டைலை பாலோ செய்து வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி ஸ்லீப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து விடுவார்கள் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது. ஆனால் இந்திய வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்களுடைய பழைய முறையை பின்தொடர்ந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடி பந்தை அவர்கள் தொடவே இல்லை. இதனால் விக்கெட்டுகள் கிடைக்கவில்லையே என்ற விரக்தி ஆஸ்திரேலிய வீரர்களை ஆட்டிப்படைத்தது.

குறிப்பாக ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவார் என அவருக்கு பில்டர்களை பவுண்டரி லைனில் கம்மின்ஸ் நிற்க வைத்தார். ஆனால் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை புரிந்து கொண்டு எந்த ஒரு ஆக்ரோஷ சாட்டையும் ஆடாமல் பந்தைக் கீழேயே அடித்து ஓடியே ரன்கள் சேர்த்தார். தாங்கள் அதிரடி பேட்ஸ்மேன்கள் என ஆஸ்திரேலியாவை நம்ப வைத்துவிட்டு இந்தியா அதிரடியை கையெடுக்காமல் அமைதி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை நன்றாக ஏமாற்றி விட்டது.

Story first published: Sunday, November 24, 2024, 11:01 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+