பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்கள் விளாசி அபாரமாக விளையாடி வருகிறார். ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய வீரர்களின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தி விடலாம் என நினைத்து வலையை விதைத்த ஆஸ்திரேலியாவுக்கு ஜெய்ஸ்வால் தண்ணி காட்டி வருகிறார்.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2004 ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் எந்த பார்முலாவை பயன்படுத்தினாரோ, அதையே ஜெய்ஸ்வாலும் பின் தொடர்ந்து ரன்களை சேர்த்து வருகிறார்.

2003- 04ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த தொடர் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்த நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் குவித்து மாபெரும் சாதனையை படைத்தார்.
இதற்கு சச்சின் டெண்டுல்கர் ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தினார். அந்த தொடர் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் ஷாட் ஆடி ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இதனால் கடுப்பான சச்சின், கவர்ட்ரைவ் ஆடினால் தானே விக்கெட் போகிறது. நான் கவர் டிரைவை ஆடமாட்டேன் என்று களத்தில் நங்கூரம் போட்டு நின்றார். இதனால் சச்சினை அவுட்டாக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வாலும் அப்படிப்பட்ட ஒரு இன்னிங்சை தான் இன்று ஆடி இருக்கிறார். கவர் டிரைவ் ஆடினால் ஸ்லீப்பில் எட்ஜாகி ஆட்டமிழந்து விடுகிறோம் என்பதை புரிந்து கொண்ட ஜெய்ஸ்வால், ஸ்டார்க், ஹேசல் வுட், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் கவர் ட்ரைவ் ஆடி ஒரு பவுண்டரி கூட அவர் அடிக்கவில்லை.இதனால் பந்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெரிந்து பின்னர் டபுள்ஸ் ஓட மட்டும் ஜெய்ஸ்வால் சில ஷாட்களை ஆடினார்.
ஆனால் ஜெய்வால் 95 சதவீதம் வேகபந்துவீச்சாளர்களுக்கு எதிராக சச்சினை போல் கவர் டிரைவர் ஆடவில்லை. இதன் மூலம் ஸ்லிப்பில் கேட்ச் ஆவதை ஜெய்ஸ்வால் தடுத்து நிறுத்தினார். இதேபோன்று ஷார்ட்பால் பந்துகளை கொண்டு ஜெய்ஸ்வாலை ஆஸ்திரேலிய வீரர்கள் தாக்கினர். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அழகாக குணிந்து லீவ் செய்துவிட்டார்.
நேற்றைய ஆட்டத்தில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஒரு கவர் டிரைவ் ஆட முற்பட்டார்.அது எட்ஜாகி ஸ்லிப்பில் கேட்ச் ஆக சென்றது. எனினும் உஸ்மான் கவஜா அதனை தவற விட்டுவிட்டார். இதனை எடுத்து அந்த ஷாட்டை அவர் பயன்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.