Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வாலை கேலி செய்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. கோபத்தால் பறிப்போன விக்கெட்.. என்ன நடந்தது?

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரரான ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி பொறுப்புடன் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட் என்பதே மறந்து இந்திய அணி வீரர்கள் அதிரடி காட்ட முயற்சி செய்தார்கள்.

ind vs aus yashasvi jaiswal india vs australia gabba test vs

குறிப்பாக ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட் விளையாடுவது போல் முதல் பந்திலே பவுண்டரி அடித்து விட்டு இரண்டாவது பந்தில் கேட்ச் ஆனார். இந்த நிலையில்ஜெய்ஸ்வால் ஏன் இப்படி அதிரடியாக ஆடினார் என்பதற்கு தற்போது காரணம் தெரிய வந்துள்ளது.இந்திய அணி தங்களுடைய பேட்டிங் தொடங்குவதற்கு முன்பு ஜெய்ஸ்வால் தனது பேட்டை எடுத்துக்கொண்டு பவுண்டரி லைனில் பயிற்சி செய்து வந்தார்.

அப்போது ஜெய்ஷ்வால் ஒரு பந்தை Flick செய்தார். எனினும் இதனை பார்த்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஜெய்ஸ்வாலை வெறுப்பேற்றுவது போல் ஐயையோ பந்து எங்கள் மீது வந்து படப் போகிறது என்று குதித்து வெறுப்பேற்றினர்.

இதனை கண்ட ஜெயஸ்வால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். இதன் காரணமாக தான் ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட் போல் விளையாட நினைத்து முதல் பந்திலே பௌண்டரி அடித்து விட்டு இரண்டாவது பந்தை அதே பிளிக் ஷாட் ஆடி மிட்செல் மார்ஸ் இடம் கேட்ச் ஆனார்.

இதனால் ஜெய்ஸ்வால் கோபத்தால் நிதானத்தை இழந்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் மோசமான தொடக்கத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.இதே போன்று ஜெய்ஸ்வால் இந்த ஷாட்டை தான் ஆடப்போகிறார் என்பதை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள். சரியாக, அங்கே பில்டிங்கிற்கு வீரரை நிறுத்தி அவரது விக்கெட்டை எடுத்தனர்.

ஜெய்ஸ்வால் மட்டும் நிதானமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடி இருந்தால் பந்து பழையதாகி நான் குவிக்க நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். அதன் பிறகு ஜெய்ஸ்வால் பட்டையை கிளப்பி இருக்கலாம் இந்திய வீரர்கள் தேவையில்லாமல் அதிரடி காட்டுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டை பறி கொடுத்து இருக்கிறார்.

Story first published: Monday, December 16, 2024, 9:02 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+