Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- சரித்திரத்தில் எந்த வீரரும் செய்யாத சாதனை.. 2வது டெஸ்டில் ஜெய்ஸ்வாலுக்கு செம வாய்ப்பு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் நன்மதிப்பையும் ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.

ஏற்கனவே ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதம், ஒரு சதம் அடித்து இருந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அபார சாதனையை படைத்திருக்கிறார். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு மேலும் ஒரு சரித்திர சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ind vs aus yashasvi jaiswal india vs australia

நடப்பாண்டில் ஜெய்ஸ்வாலுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. ஜெயிஸ்வால் 12 போட்டிகளில் 1280 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம் அடங்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட ஜெய்ஸ்வால் 700 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். இதன் மூலம் கவாஸ்கருக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக இன்றைய சாதனை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை ஜெயிஷ்வால் பெற்றிருந்தார்.

தற்போது ஜெய்ஷ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் 38 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர் அடித்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு WTC சைக்கிளில் 40 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெறுவார்.

வெஸ்ட் இண்டீஸ் எதிராக மூன்று சிக்சர் அடித்த ஜெயஸ்வ இங்கிலாந்து தொடரில் அதிகபட்சமாக 26 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் 5 சிக்சர் அடித்திருந்தார். இதன் மூலம் தற்போது ஜெய் ஸ்வால் 38 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2019- 21 சைக்கிளில் 31 சிக்சர் அடித்து இருந்தார். மூன்றாவது இடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 2021-23 சைக்கிளில் 28 சிக்ஸர் அடித்திருந்தார். ரோகித் சர்மா 2019- 21 சைக்கிள் 27 சிக்ஸரும், நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் நடப்பு டெஸ்ட் சைக்கிளில் 23 சிக்சர் அடித்த ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஜெய்ஸ்வால் ஏற்கனவே முதல் 15 டெஸ்டுகளிலே 1500 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 5, 2024, 12:00 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+