
என்ன நடந்தது?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் இரண்டாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8வது ஓவரில் இந்தியாவை சேர்ந்த ரசிகை ஒருவர் பதாகை ஒன்றை காண்பித்தார். அது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

என்ன அறிவிப்பு?
அந்த பதாகையில் "ஒவ்வொரு பவுண்டரிக்கும் என் பார்ட்னரை நான் கிஸ் செய்வேன்" என எழுதப்பட்டு இருந்தது. மைதானத்தில் இருந்த பலரும் அதைக் கண்டு சிரிக்கத் துவங்கினர். அப்போதே இணையத்தில் அந்த புகைப்படம் வைரல் ஆனது.

சிங்கிள்ஸ் சோகம்
இணையத்தில் அந்த அறிவிப்பை கேட்ட சிங்கிள்ஸ் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறத் துவங்கினர். இப்படி ஒரு அறிவிப்பா? என பலரும் அதை பகிரத் துவங்கினர். அந்த நிகழ்வு ட்விட்டரில் வேகமாக பரவியது. நம் ஆட்கள் சும்மா விடுவார்களா?

எத்தனை பவுண்டரி?
போட்டியில் மொத்தம் எத்தனை பவுண்டரி என எண்ணத் துவங்கினர். ஆஸ்திரேலிய அணி 15 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தது. இந்திய அணி 13 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து இருந்தது. இரண்டாவது டி20 போட்டியில் மொத்தம் 44 பவுண்டரி அடிக்கப்பட்டது.

ஒரே பிஸி
இந்த கணக்கை போட்ட சில ரசிகர்கள், அந்த பெண் ஒரே பிஸி தான் என நையாண்டி செய்யத் துவங்கினர். சிலர் யார் அந்த கொடுத்த வைத்த பார்ட்னர் என பொறாமையில் வெந்தனர். இது போன்ற சில விஷயங்களை செய்து வைரல் ஆவது ஒரு வாடிக்கையாக மாறி வருகிறது.

நிச்சயம் செய்த இளைஞர்
ஒருநாள் தொடரில் ஒரு இந்திய இளைஞர், ஆஸ்திரேலிய பெண்ணிடம் தன் காதலை சொல்லி மோதிரம் அணிவித்தார். போட்டியை கூட மறந்து விட்டு ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதை கை தட்டி வரவேற்று இருந்தார்.

இந்தியா வெற்றி
இரண்டாவது டி20 போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய அணி வெற்றியும் பெற்றது. ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆட இந்திய அணி 195 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது. டி20 தொடரையும் 2 - 0 என கைப்பற்றியது இந்திய அணி.


Click it and Unblock the Notifications