இவங்களை எல்லாம் என்ன பண்றது? இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. பிசிசிஐக்கு சவால்!
மும்பை : இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய சவால் உருவாகி உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றாலும், பிசிசிஐ இந்த புதிய சவாலை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரர்களை பயன்படுத்தி இருந்தது.
பல டெஸ்ட் அணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து இந்திய அணி இந்த முடிவை எடுத்தது.

கடைசி போட்டியா?
அப்படி இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கடைசி போட்டியின் வெற்றியில் அறிமுக வீரர்கள் நடராஜன், வாஷிங்க்டன் சுந்தரின் பங்களிப்பு அதிகம். ஆனால், அவர்களுக்கு அதுவே கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்குமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இளம் வீரர்கள்
வழக்கமான டெஸ்ட் அணி வீரர்களை தவிர்த்து ஷுப்மன் கில், முகமது சிராஜ், வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் சிறப்பாக செயல்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் மீண்டும் அணியில் வாய்ப்பு கொடுப்பது என்பது கடினம். அனுபவ வீரர்கள் அணிக்கு திரும்பும் போது இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியாது.

மீண்டும் வந்தால்..
ஹனுமா விஹாரி, விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஷமி, ஜடேஜா என பல்வேறு காரணங்களால் அணியில் இருந்து விலகி இருக்கும் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள். அப்போது யாரை ஆட வைப்பது என்ற சிக்கல் எழும். இந்த சிக்கலை பிசிசிஐ எப்படி கையாளப் போகிறது?

நடராஜன் இல்லை
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் நடராஜன் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. மற்ற இளம் வீரர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இன்னும் பல வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்பது தான். அவர்களும் வந்தால் கேப்டன் கோலிக்கு பெரிய தலைவலி காத்துக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications