Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வேண்டுமானால், இதை செய்யனும்.. ஜாகீர் கான் அறிவுரை

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனனில் இடம் பெற்றார். பந்து வீச வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் 187 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது இந்திய அணி 11 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

அப்போது பன்னிரண்டாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். 23 பந்துகளில் அவர் 49 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Ind vs Aus

வாஷிங்டன் தனது பேட்டிங்கில் நான்கு சிக்சர்களை விளாசினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிளேயிங் லெவன் அடிக்கடி மாறுபடும். எந்த மாதிரி ஆடுகளம் கிடைக்கிறதோ அதற்கேற்றார் மாதிரி தான் வீரர்களை தேர்வு செய்வார்கள்.

எனவே டி20 கிரிக்கெட்டில் ஆஃப் ஸ்பின்னர்கள் அணியின் இடம்பெறுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். இதனால் நமக்கு என்ன பணி கிடைக்கிறது என்பதை நமக்கு புரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். எப்போதுமே நமக்கு அணியின் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று குழம்பி ஏமாற்றம் அடைவதை விட வரும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைக்க வேண்டும்.

அதனை வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செய்திருக்கிறார் என்று நினைக்கின்றேன். எப்போதெல்லாம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவர் மெருகேறி வருகிறார். இதுபோன்று தொடர்ந்து ஒரே மாதிரி ரன்களை சேர்த்து வந்தால், அணி நிர்வாகம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களுக்கு அணியில் நிரந்தர இடம் தரும்.

உங்களுக்கான இடத்தை அணியில் நிர்வாகமே உருவாக்கும். நாம் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாடினால்தான் அந்த நிலை ஏற்படும். அணியில் உள்ள ஒவ்வொருவரும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் இது ஒன்றுதான் ஒரே வழி. நான்காவது டி20 போட்டியில் எந்த மாதிரி ஆடுகளம் கிடைக்கிறது, அதை வைத்து பிளேயிங் லெவனை மாற்ற வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் இருந்தால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக அணியில் சேர்க்கலாம்.

மேலும் வாஷிங்டன் சுந்தரை பந்துவீச்சு இன்னும் அதிகமாக பயன்படுத்தலாம். இதே போன்று பவர் பிளவில் பும்ரா 3 ஓவர் தொடர்ந்து வீச வேண்டுமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். என்னைக் கேட்டால் நான்காவது டி20 போட்டிகளில் பிளேயிங் லெவனை பயன்படுத்திக் கொள்ளலாம். வேற எந்த மாற்றமும் தேவைப்படாது என்று ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நவம்பர் 6ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.

Story first published: Sunday, November 2, 2025, 23:55 [IST]
Other articles published on Nov 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+