For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN - முதல் டி20 போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள்.. சூர்யகுமார், ஹர்திக் அபாரம்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் மற்றும் முதலில் பந்து வீசிய இந்திய அணி 127 ரன்களில் வங்கதேசத்தை சுருட்டியது. இதில் இந்திய வீரர் ஆர்ஸ்தீப் சிங் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. 49 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ind vs ban india vs bangladesh hardik pandya

இந்த நிலையில் இந்த போட்டியில் உடைக்கப்பட்ட ரெக்கார்டுகளை தற்போது பார்க்கலாம் வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து எட்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. ஜூலை மாதம் தொடங்கி இந்த வெற்றி தற்போது வரை தொடர்கிறது. இதற்கு முன்பு இந்திய அணி 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தொடர்ந்து ஒன்பது டி20 போட்டிகளில் வென்று இருக்கிறது.

அதற்கு முன்பு டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பன்னிரண்டு போட்டிகளிலும், நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 12 வெற்றிகளையும் தொடர்ந்து இந்தியா கைப்பற்றி இருக்கிறது. இதே போன்று 100 ரன்கள் மற்றும் அதற்கு மேல் இந்தியா சேசிங் செய்யும் போது அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று இருப்பதில் இது முதல் இடமாகும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 49 பந்துகள் எஞ்சி வெற்றியை உறுதி செய்து இருக்கிறது.

இதற்கு முன்பு 100 ரன்கள் என்ற இலக்கை எட்டும் போது ஜிம்பாப்வேவுக்கு எதிராக 41 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றியை பெற்றதே முதலிடமாக இருந்தது. அதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 116 ரன்கள் என்ற இலக்கை 31 பந்துகள் எஞ்சி நிலையிலும், 2010 ஆம் ஆண்டு 112 ரன்கள் என்ற இலக்கை 30 பந்துகள் எஞ்சிய நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராகவும் இந்தியா வென்று இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் சேஸிங்கில் டி20 கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக ஹர்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இதற்கு முன்பு கோலி 4 முறையும், தோனி மூன்று முறையும் சிக்ஸர் அடித்து இந்திய அணியை டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இதேபோன்று 25 ரன்களுக்கு மேல் அடிக்கும் போது ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் ஹர்திக் பாண்டியா ஒன்பதாவது முறையாக அடித்திருக்கிறார்.

சர்வதேச t20 கிரிக்கெட்டில் பேட்டர்ஸ் 30 ரன்களும், பந்து வீச்சில் ஒரு விக்கெட்டும் என ஹர்திக் பாண்டியா 11 வது முறையாக டி20 கிரிக்கெட் செய்திருக்கிறார். சூரியகுமார் பொறுத்தவரை இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாஸ் பட்லரை முந்தி தற்போது நான்காவது இடத்தில் இருக்கின்றார்.

Story first published: Monday, October 7, 2024, 7:00 [IST]
Other articles published on Oct 7, 2024
English summary
Ind vs Ban 1st T20 - List of Records are created by India cricket team IND vs BAN - முதல் டி20 போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள்.. சூர்யகுமார், ஹர்திக் அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+