Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN 1st T20: மழையால் போட்டி தடைபடுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள முதல் டி20 போட்டி குவாலியரில் உள்ள புதிய மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது மழை பெய்யுமா? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இரண்டரை நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

அது போன்ற சூழ்நிலை இப்போதும் ஏற்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. முதல் டி20 போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது புதிய மைதானம் ஆகும். இந்தப் போட்டியே இங்கு நடைபெற உள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும். எனவே, முதல் போட்டி எந்த தடங்கலும் இன்றி நடைபெற வேண்டும் என குவாலியர் மைதான நிர்வாகிகள் கவனமாக செயலாற்றி வருகின்றனர். குறிப்பாக, மழை வாய்ப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ind vs ban india bangladesh

போட்டி நேரத்தின் போது அங்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம் சில நாட்களுக்கு முன்பு அங்கு கடுமையான மழை பெய்தது. அப்போது மைதானத்தில் மழை நீர் தேங்கியது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதிகள் சரியாக இல்லாத நிலையில் அவுட் ஃபீல்டு பகுதியை பார்த்து அம்பயர்கள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவிப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளது.

அதனால், மைதான ஊழியர்கள் அவுட் ஃபீல்டை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், பிட்ச் உள்ள பகுதிகள் முழுவதுமாக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டு இருக்கிறது. மழை பெய்யாத போதும் அதிக வெயிலால் பிட்ச் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில், பும்ரா போன்ற பல வீரர்கள் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் ஓய்வில் உள்ளனர். அவர்களுக்கு பதிலாக வேறு சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

முதல் டி20 போட்டியில் பங்கேற்க உள்ள பிளேயிங் லெவன் கணிப்பு :

இந்தியா XI உத்தேச அணி : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி/வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் மயங்க் யாதவ்

வங்கதேசம் XI உத்தேச அணி : டன்சித் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிருதோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், டன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்

Story first published: Sunday, October 6, 2024, 8:26 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+