Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் என்ன? 3வது ஸ்பின்னர் யார்?

மும்பை : பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா, வங்கதேச அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வங்கதேச அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.

அது மட்டுமல்லாமல் வங்கதேச அணியில் தற்போது திறமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அனுபவ மிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்தியா கொஞ்சம் கடினமாக முயற்சி செய்துதான் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கின்றது.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க கூடும். இதேபோன்று மூன்றாவது வீரராக கில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் காலடியை அழுத்தமாக பதிய ஆரம்பித்திருக்கிறார். எனினும் தன்னுடைய இடத்தை அவர் உறுதி செய்ய வேண்டுமென்றால் வங்கதேச தொடரில் அவர் பெரிய சதம் அடிக்க வேண்டும். இதைப் போன்று நான்காவது வீரராக விராட் கோலி திரும்புகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு மாதத்திற்கு பிறகு விராட் கோலி விளையாடுகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித், ஜோரூட் வில்லியம்சன் ஆகியோர் அபாரமாக விளையாடி வரும் நிலையில் விராட் கோலியும் அந்த பட்டியலில் இணைய இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பர் ஐந்தாவது வீரராக கே எல் ராகுல் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த நிலையில் கே எல் ராகுல் தற்போது அணிக்கு திரும்பி இருக்கிறார். இதில் பெரிய சதம் அடித்தால் மட்டுமே அவருடைய இடம் அவருக்கு கிடைக்கும். இந்த சூழலில் ஆறாவது வீரராக ரிஷப் பண்ட் விளையாட உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பியதும் ரிஷப் பண்ட், துலீப் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி தன்னுடைய ஃபார்மை நிரூபித்து இருக்கிறார்.

ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாட கூடும். எட்டாவது வீரராக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாடப் போகிறார். இந்த சூழலில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக ஒன்பதாவது இடத்தில் அக்சர் பட்டேல் களமிறங்குவாரா இல்லை குல்தீப் களமிறங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.துலீப் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

ஆனால் அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே ஜொலித்திருக்கிறார். இதனால் யார் அந்த இடத்திற்கு வரப்போகிறார் என்பது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில் 10 மற்றும் 11 வது வீரராக பும்ரா மற்றும் சிராஜ் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்- 1,ரோகித் சர்மா, 2, ஜெய்ஸ்வால் 3,கில் 4,விராட் கோலி 5, கேஎல் ராகுல் 6,ரிஷப் பண்ட் 7, ஜடேஜா 8, அஸ்வின் 9,குல்தீப் யாதவ்/அக்சர் பட்டேல்,10, பும்ரா 11,முகமது சிராஜ்

Story first published: Tuesday, September 17, 2024, 7:30 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+