Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - சென்னையில் லீலா பேலசில் தங்கி இருக்கும் இந்திய வீரர்கள்.. ஒருநாள் வாடகை, நவீன வசதி என்ன

சென்னை : இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்திருக்கிறார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கி பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முடித்துக் கொண்டு இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ரிஷப் பண்ட் உள்ளிட்டவர்கள் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸ் சொகுசு 5 நட்சத்திரம் ஹோட்டலுக்கு திரும்பினார்கள்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்கி இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு நாள் ரூம் வாடகை எவ்வளவு? அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த லீலா பேலஸ் ஹோட்டல் சுமார் 4.8 ஏக்கர் அளவில் அமைந்துள்ளது. 11 அடுக்குமாடி ஹோட்டல் ஆன இதில் 326 சொகுசு ரூம்கள் இருக்கிறது.

இதில் ஒரு ரூமின் வாடகை 12,744 ரூபாய் ஆகும். பொதுவாக இந்திய அணி வீரர்கள் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தான் தங்கி இருப்பார்கள். ஆனால் இம்முறை லீலா பேலஸ் தங்கி இருக்கிறார்கள். கடற்கரையை ஒட்டியவாறு அரை இருப்பதால் எழில் மிகுந்த இயற்கை காட்சியை ஹோட்டலில் இருந்தவாறு ரசிக்க முடியும். மேலும் இந்த ஹோட்டலில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு ஆகியவற்றை கண்டு களிக்கலாம்.

அது மட்டுமில்லாமல் இந்த ஹோட்டலில் அதிநவீன ஜிம் வசதி இருக்கின்றது. வீரர்கள் தங்களுக்குள் உரையாடவும் போட்டியின் நுணுக்கம் குறித்து ஆலோசனை நடத்தவும் தனியாக ஆலோசனை கூடம் இருக்கின்றது. மேலும் மிகப்பெரிய நீச்சல் குளமும் ஹோட்டலில் அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அறையிலும் பால்கனி வசதியும் இருக்கிறது.

வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்க மினி பார் வசதியும் இந்த ஹோட்டலில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் வீரர்கள் நீராவி குளியல் செய்வதற்கும் இந்த ஹோட்டலில் வசதிகள் இருக்கிறது .இது மட்டுமல்லாமல் முடி திருத்தும் சலூன் மற்றும் மசாஜ் செய்து கொள்ளும் வசதி, பேசியல் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இந்த ஹோட்டலில் இருக்கின்றது.

மேலும் இந்த ஹோட்டலில் ஐஸ்கிரீம் கேக் வகைகள், சைவ, அசைவ உணவுகள் உள்ளிட்ட பல வகைகள் இருக்கிறது. இந்த ஹோட்டலில் ஒரு சிக்கன் டிக்காவின் விலை சுமார் 1100 ரூபாய் ஆகும். இதேபோன்று கிரீக் சாலட் விலை 900 ரூபாய் ஆகும், இங்கு நண்டு வறுவல் பீசாவின் விலை 1325 ரூபாய் ஆகும். தந்தூரி பன்னீர் டிக்கா ஒன்றின் விலை 950 ரூபாய் ஆகும். இதேபோன்று கிரில் சிக்கன் வகை 1200 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது.

இப்படி பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ஹோட்டலில் தான் இந்திய அணி வீரர்கள் தங்கி இருக்கிறார்கள். இந்த ஹோட்டலில் இருந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு பத்து நிமிடத்தில் சென்று விடலாம். போட்டிக்கான டாஸ் 9 மணிக்கு போடப்படும். இதனால் வீரர்கள் ஹோட்டலில் இருந்து எட்டு மணிக்கு எல்லாம் புறப்பட்டு விடுவார்கள். பெரும்பாலும் வீரர்கள் செல்லும் நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்படாது. ஆனால் பேருந்துக்கு முன்பும் பின்பும் பல போலீஸ் வாகனங்கள் செல்லும். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம்.

Story first published: Thursday, September 19, 2024, 8:00 [IST]
Other articles published on Sep 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+