டெல்லி: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் இரண்டு தமிழக வீரர்களில் ஒருவரை நீக்க வாய்ப்பு உள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு வாய்ப்பு உள்ளதா? என்று பார்க்கலாம்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் இருவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டர் ஆவார்.

முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். எனினும், முதல் ஓவரில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்தது மட்டுமே சிறிய பின்னடைவாக அமைந்தது. தற்போது மாற்று வீரர்களாக வெளியில் அமர்ந்திருக்கும் நால்வரில் ரவி பிஷ்னோய் உள்ளார். அவர் சுழற் பந்துவீச்சாளர் ஆவார். இடையே அவர் சர்வதேச டி20 போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் அவருக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த தொடரில் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ரவி பிஷ்னோய்-க்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி உள்ளது. அவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்றால் வாஷிங்டன் சுந்தர் அல்லது வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அத்தனை எளிதில் பிளேயிங் லெவனை மாற்ற விரும்ப மாட்டார் என்பதால் இந்த மாற்றம் நடக்க வாய்ப்பில்லை. அதேபோல, மாற்று வீரர்களாக இருக்கும் திலக் வர்மா மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படக்கூடும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். கவுதம் கம்பீர் அடிக்கடி அணியின் பிளேயிங் லெவனை மாற்ற மாட்டார் என்பதால் இதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பங்கேற்க உள்ள உத்தேச இந்திய அணி :
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்