Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN 2nd Test- 9 ஆண்டுகளில் முதல்முறை இப்படி நடந்து இருக்கு.. டிராவை நோக்கி செல்லும் போட்டி

கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு நாள் ஆட்டம் முழுவதும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டு இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நான்கு நாட்கள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டு இருந்தது. அதன் பின் இப்போது தான் ஒரு நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டு இருக்கிறது. இரண்டாவது நாள் அன்று அதிக அளவில் மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இரு அணி வீரர்களும் காலை 11 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறினர். பின்னர் 2.15 மணி அளவில் அம்பயர்கள் இரண்டாவது நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

ind vs ban india bangladesh

2015இல் நடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியின் போதும் இந்தியா டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. அதன் பின் ஒன்பது ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி டாஸ் வென்ற பின் பந்து வீச்சை தேர்வு செய்தது இல்லை. அப்போதும் மழை காரணமாகவே இந்திய அணி டாஸ் வென்ற பின் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தது.

இப்போதும் மழையின் காரணமாகவே வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற பின் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 35 ஓவர்களில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது.

தற்போது இரண்டாவது நாள் ஆட்டமும் முழுமையாக கைவிடப்பட்டிருக்கும் நிலையில் கடைசி மூன்று நாட்கள் ஆட்டமாவது நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மூன்றாவது நாள் சில ஓவர்கள் பந்து வீசப்பட வாய்ப்பு உள்ளது.

நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் அன்று போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டரை நாள் ஆட்டத்தில் இந்த போட்டி முடிவுக்கு வருமா? என்ற சந்தேகம் உள்ளது. வங்கதேசம் நிச்சயமாக இந்த போட்டியை டிரா செய்ய முயற்சி செய்யும். இந்த போட்டி டிரா ஆனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி சதவீதத்தில் சிக்கல் எழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 28, 2024, 14:59 [IST]
Other articles published on Sep 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+