Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN -இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்க போவது இந்த 5 வங்கதேச வீரர்கள் தான்!பாக்.கதையை முடித்தவர்கள்

டாக்கா : வங்கதேச அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறார்கள். வங்கதேச அணி அண்மையில் பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனிக்க வேண்டிய ஐந்து வங்கதேச வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன். 15 ஆண்டுகளில் வங்கதேச அணி முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இவருடைய தலைமை பண்புதான்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

பவுலர்களை சிறப்பாக கையாண்டு எதிரணிக்கு நஜிமுல்க்கு நெருக்கடி கொடுத்தார். அது மட்டுமில்லாமல் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்த நஜ்முல் அபார சதம் அடித்திருந்தார். எனினும் அந்தத் தொடருக்கு பிறகு பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை என்றாலும் தலைமை பண்பில் கவனத்தில் ஈர்க்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நகித் ரானா.

வங்கதேச அணியின் அதிவேக பந்து வீச்சாளராக நஹித் ரானா விளங்குகிறார். தொடர்ந்து 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசும் நகித் ராணா, எப்போதாவது 150 கிலோமீட்டர் வேகத்தையும் தாண்டுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி அசத்தினார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை கொடுத்திருப்பவர் ஷத்மான் இஸ்லாம்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 93 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சத்மான் மற்றும் ஜாகிர் ஹசன் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்து வருகிறது. இதனால் இந்திய தொடரில் இவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஹசன் மகமத்.

24 வயது வீரரான ஹசன் மகமத் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் அதனை ஸ்விங் செய்வதில் சிறந்த வீரராக விளங்குகிறார். மேலும் இறுதிக்கட்டத்தில் நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமைத்து தருகிறார்.இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் மெஹதி ஹசன். ஹசன் ஏற்கனவே தன்னுடைய திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராகவே நிருபித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மெஹதி ஹசன் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு செயல்பட்டு இருக்கிறார். இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெகதி ஹசன் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் சகிபுல் ஹசன் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு எதிராக அபாரமாக விளையாடி வருகிறார்.இதனால் இளமையும் திறமையும் கலந்த அணியாக வங்கதேசம் இருக்கிறது.இதுவரை வங்கதேச அணி 13 முறை இந்தியாவை டெஸ்ட்போட்டிகளில் எதிர்கொண்டுள்ளது. இதில் 11முறை தோல்வி, 2 முறை டிராவை வங்கதேசம் கண்டுள்ளது.

Story first published: Tuesday, September 17, 2024, 8:00 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+