Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: மரண அடி.. மெகா ரெக்கார்டு.. யுவராஜ் சாதனையை உடைத்து வரலாறு படைத்த அபிஷேக் ஷர்மா

துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் புயல் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 74 ரன்கள் விளாசிய அவர், இந்தப் போட்டியிலும் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். இந்த அதிரடி இன்னிங்ஸின் மூலம், தனது குருநாதரான யுவராஜ் சிங் உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து, புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார்.

அதிவேக அரைசதத்தில் யுவராஜை முந்தினார்!

இந்தப் போட்டியில் தனது அரைசதத்தை வெறும் 25 பந்துகளில் எட்டிய அபிஷேக் ஷர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 25 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் 50 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் தனது குருநாதர் யுவராஜ் சிங்கை முந்தினார். யுவராஜ் சிங் 4 முறை இந்தச் சாதனையைச் செய்திருந்த நிலையில், அபிஷேக் ஷர்மா 5வது முறையாக இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார்.

IND vs BAN Abhishek Sharma Break Yuvraj Singh Record and hit new Sixes record in Asia Cup

டி20 போட்டிகளில் 25 அல்லது குறைவான பந்துகளில் அதிகமுறை 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:

  • சூர்யகுமார் யாதவ் - 7 முறை
  • ரோகித் சர்மா - 6 முறை
  • அபிஷேக் ஷர்மா - 5 முறை
  • யுவராஜ் சிங் - 4 முறை
  • கே.எல். ராகுல் - 3 முறை

ஆசிய கோப்பையின் "சிக்ஸர் கிங்"!

இந்தப் போட்டியில் 5 சிக்ஸர்களைப் பறக்கவிட்டதன் மூலம், அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பை தொடரில் இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர் சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் அதிக சிக்ஸர்கள்: ஆசிய கோப்பையின் டி20 வடிவ வரலாற்றில், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் படைத்துள்ளார். 5 போட்டிகளில் 17 சிக்ஸர்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார்.

  • அபிஷேக் ஷர்மா (இந்தியா): 17 சிக்ஸர்கள்
  • ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்): 15 சிக்ஸர்கள்
  • பாபர் ஹயாத் (ஹாங்காங்): 14 சிக்ஸர்கள்

ஒரே ஆசிய கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள்: இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் மட்டும் 17 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், ஒரே ஆசிய கோப்பை தொடரில் (ஒருநாள் மற்றும் டி20) அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சனத் ஜெயசூர்யாவின் (14 சிக்ஸர்கள், 2008) நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார்.

ரன் குவிப்பில் புதிய மைல்கற்கள்!

200+ ரன்கள் கிளப்பில் இணைந்தார்: இந்தப் போட்டியின் மூலம், இந்த ஆசிய கோப்பையில் தனது மொத்த ரன்களை 248 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம், ஒரே ஆசிய கோப்பை டி20 தொடரில் 200 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது வீரர் (முகமது ரிஸ்வான் மற்றும் விராட் கோலிக்குப் பிறகு) என்ற பெருமையைப் பெற்றார்.

தொடர் அரைசதங்கள்: பாகிஸ்தானுக்கு எதிராக 74 ரன்களும், வங்கதேசத்திற்கு எதிராக 75 ரன்களும் எடுத்ததன் மூலம், ஆசிய கோப்பை டி20 தொடரில் அடுத்தடுத்து அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் (விராட் கோலிக்குப் பிறகு) என்ற பெருமையையும் பெற்றார்.

ரிஸ்வானின் சாதனையை நெருங்குகிறார்: இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் இன்னும் 34 ரன்கள் எடுத்தால், ஒரே ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற முகமது ரிஸ்வானின் (281 ரன்கள்) சாதனையை அபிஷேக் முறியடிப்பார்.

ஐசிசி தரவரிசையில் புதிய உயரம்!

தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தின் மூலம், ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தனது நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதோடு, 907 ரேட்டிங் புள்ளிகளை எட்டியுள்ளார். இது, இந்திய வீரர்கள் மத்தியில் சூர்யகுமார் யாதவ் (912) மற்றும் விராட் கோலிக்கு (909) அடுத்தபடியாக மூன்றாவது அதிகபட்ச ரேட்டிங் புள்ளிகளாகும்.

ஆசிய கோப்பை 2025-ல் அபிஷேக் ஷர்மாவின் ஆட்டம்:

  • எதிரணி: ஐக்கிய அரபு அமீரகம், ரன்கள்: 30, பந்துகள்: 16, 4/6s: 2/3
  • எதிரணி: பாகிஸ்தான், ரன்கள்: 31, பந்துகள்: 13, 4/6s: 4/2
  • எதிரணி: ஓமன், ரன்கள்: 38, பந்துகள்: 15, 4/6s: 5/2
  • எதிரணி: பாகிஸ்தான், ரன்கள்: 74, பந்துகள்: 39, 4/6s: 6/5
  • எதிரணி: வங்கதேசம், ரன்கள்: 75, பந்துகள்: 37, 4/6s: 6/5
Story first published: Thursday, September 25, 2025, 7:54 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+