IND vs BAN - மோசமான ரன் அவுட்டில் சிக்கிய அபிஷேக் சர்மா.. சாம்சன் மீது தவறு இருக்கிறதா?
குவாலியர் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற இந்திய அணி t20 தொடரின் முதல் போட்டியில் இன்று களமிறங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதிகபட்சமாக மெகதி ஹசன் 32 பந்துகளில் 35 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 19.5 ஓவரில் 127 ரன்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெடுக்களையும் இழந்தது. இதனை அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
இளம் வீரர் அபிஷேக்சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக அபிஷேக் ஷர்மா இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என ஏழு பந்துகளில் 16 ரன்கள் குவித்தார். ஏற்கனவே அபிஷேக் ஷர்மா 48 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார்.
இந்த போட்டியிலும் அவர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் நம்பி ஏமாந்து ரன் அவுட் ஆனார்.சாம்சன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நேராக பில்டரிடம் பந்தை அடித்து விட்டு ரன் ஓட முயற்சித்தார்.
ஆனால் பில்டர் பந்தை எடுத்துவிட்டார் என தெரிந்தவுடன் ரன் ஓடாமல் மீண்டும் கிரிஸ்க்குள் திரும்பினார். எனினும் சஞ்சு சாம்சனை நம்பி பந்து ஃபீல்டர் இடம் சென்றதைப் பார்க்காமல் அபிஷேக் ஷர்மா பாதி தூரம் மூடி வந்து மீண்டும் கிரீசுக்கு திரும்புவதற்குள் தவ்ஹீத் ஹிருதாய் டைரக்ட் த்ரோவால் ரன் அவுட் செய்தார்.
இதனால் மிகவும் ஏமாற்றத்துடன் அபிஷேக் ஷர்மா பெவிலியன் திரும்பினார். சஞ்சு சாம்சன் மீதுதான் தவறு இருப்பதாகவும் அபிஷேக் ஷர்மாவை அவர் ஏமாற்றி விட்டார் என்றும் ரசிகர்கள் கடுமையாக அவரை சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications