டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்.. 297 ரன்கள் குவித்த இந்திய அணிக்கு 2வது இடம்.. முதலிடத்தில் யார்?
ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்கள் குறித்து பார்க்கலாம்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்களை குவித்து புதிய வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 8 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 111 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 75 ரன்களும் விளாசினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக 22 சிக்ஸ் மற்றும் 25 பவுண்டரிகளை விளாசியுள்ளனர். இதன் மூலமாக மொத்தமாக 47 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது. இதன் மூலமாக இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை ஒரு டி20 இன்னிங்ஸில் 43 பவுண்டரிகள் விளாசியதே சாதனையாக இருந்தது.
2019ஆம் ஆண்டு துருக்கி அணிக்கு எதிரான போட்டியில் செக் குடியரசு அணி 43 பவுண்டரிகள் விளாசியது. தற்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. அதேபோல் ஒரு டி20 இன்னிங்ஸில் 297 ரன்கள் விளாசியதன் மூலமாக இந்திய அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது. இதன் மூலமாக 3 வடிவங்களையும் விளையாடும் அணிகளில், ஒரே டி20 இன்னிங்ஸில் அதிக ரன்களை விளாசி இந்தியா சாதனை படைத்துள்ளது.
சர்வதேச அளவில் 2023 ஆசியப் போட்டிகள் தொடரில் மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 314 ரன்கள் குவித்தது தான் ஒரு டி20 இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதன்பின் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி குவித்துள்ள 297 ரன்கள் 2வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 278/3 ரன்களை குவித்தது 3வது அதிகபட்ச ஸ்கோராகும். இதன்பின் 2019ஆம் ஆண்டு துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் செக் குடியரசு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது 4வது அதிகபட்ச் ஸ்கோராகவும், ஆசியப் போட்டிகள் தொடரில் தாய்லாந்து அணிக்கு போட்டியில் மலேசியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது 5வது அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications