Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 ஆண்டுக்கு முன் விளையாடிய தமிழக வீரரை மீண்டும் இந்திய அணியில் சேர்த்தது ஏன்? முன்னாள் வீரர் கேள்வி

மும்பை : இந்திய டி20 கிரிக்கெட் அணியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். டி20 உலக கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்படுகிறார். ஏற்கனவே கொல்கத்தா அணியில் மென்டராக பணிபுரிந்துள்ளார். கம்பீர் பணியில் இருந்த போது வருண் சக்கரவர்த்தி ஹர்சித் ராணா போன்ற வீரர்கள் கே கே ஆர் அணியில் விளையாடினார்கள்.

ind vs ban suryakumar yadav t20 cricket india vs bangladesh

இந்த நிலையில் இருவரும் தற்போது இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டிருப்பது தான் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கம்பீர் தன்னுடைய ஆதிக்கத்தை பயன்படுத்தி இருவரையும் அருகில் சேர்த்து இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடாத ஒரு வீரரை தற்போது திடீரென்று என் சேர்த்து இருக்கிறீர்கள்.

தற்போது வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்க்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது யாருக்கு பதிலாக அவர் அணியில் இடம் பிடிப்பார் என்பது ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. ரவி பிஷ்னாய், டி20 அணியில் நம்பர் ஒன் பவுலராக இருந்திருக்கிறார். ஆனால் தற்போது அவருக்கு இந்திய அணியில் இடம் இல்லை. இந்த சூழலில் ரவி பிஷ்னாய் தான் முதல் சுழற் பந்துவீச்சாளராக அணியில் இருக்க வேண்டும்.

டி20 உலக கோப்பையில் கூட ரவி பிஸ்னாய் இடம்பெறவில்லை. இந்த சூழலில் நீங்கள் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்து விளையாடினால் மட்டுமே ரவி பிஸ்னாய் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மூன்று சுழற் பந்துவீச்சாளர் வைத்து விளையாட முடியும். ஆனால் அது சரிப்பட்டு வருமா என்று தெரியாது என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

Story first published: Sunday, October 6, 2024, 16:49 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+