Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஷமியா? நான் யாராகவும் மாறவும் விரும்பவில்லை.. என்னை வளர்த்து கொள்கிறேன்- ஆகாஷ் தீப் கருத்து

மும்பை : டி20 காலம் முடிந்து தற்போது டெஸ்ட் போட்டிகளின் திருவிழா இந்தியாவில் தொடங்க இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஜனவரி மாதம் வரை இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளும், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளும் சொந்த மண்ணில் நடைபெறுகிறது.

இது அனைத்திலும் இந்தியா என்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்று விட முடியும். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்த நிலையில் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடும் உள்ளதால் வேகபந்துவீச்சாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள் என்பதால் ஒரு பட்டாளத்தையே கம்பீரும், அஜித் அகார்கரும் இணைந்து தேர்வு செய்திருக்கிறார்கள். முகமது சமி தற்போது காயத்திலிருந்து மீண்டு வராத நிலையில் பும்ராவும், முகமது சிராஜூம் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள்.

இதைப்போன்று முகேஷ் குமார் ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் கான், கலில் அகமத் போன்ற டாப் வேகப்பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஆகாஷ் தீப் என்ற பெங்காலை சேர்ந்த 27 வயதான வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். துலீப் கோப்பை போட்டியில் கூட அபாரமாக செயல்பட்ட ஆகாஷ் தீப் தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருக்கிறார்.

ஆகாஷ் தீப்பை பாராட்டிய கங்குலி இவர் அடுத்த முகமது சமியாக வரும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் தீப், தற்போது நான் யார் உடனும் போட்டி போட வில்லை. என்னை பொறுத்தவரை நான் எனக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டு சிறந்த பவுலராக விளங்க முயற்சி செய்கிறேன்.

தற்போது என் பந்துவீச்சில் நான் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது குறித்து தான் யோசித்து வருகின்றேன். அதற்கான பயணம் தற்போது கிடைக்கின்றது. நாம் மற்றவர்களுடன் போட்டி போட தொடங்கினால் நமது பலம் என்ன என்பதில் கவனம் செலுத்த தவறி விடுவோம். தற்போது இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவருமே வித்தியாசமானவர்கள்.

எனவே ஒருவரைப் போல் நான் வரவேண்டும் என்று நான் உழைக்கவில்லை. நான் என்னைப் போலவே இருக்க வேண்டும். என்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அதை செய்தாலே மற்றவை தானாக நிகழ்ந்து விடும். நான் என்னுடைய ஆரம்ப காலத்தில் பெங்கால் அணிக்காக விளையாட வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.ஆனால், அதன் பிறகு ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

தற்போது நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று மனதில் நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் என் மீது நானே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வேன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான்எதிர்காலத்தைக் குறித்து அதிகமாக யோசிக்க மாட்டேன்.ஆஸ்திரேலியா தொடருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

யாருக்கு தெரியும் எனவே ஆரம்பத்திலேயே இதற்காக திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கூடுதலாக நெருக்கடிதான் ஏற்படும். தற்போது என்னுடைய கவனம் எல்லாம் வங்கதேச தொடரிலே இருக்கிறது. அதில் வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய அணியை நான் எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது குறித்துதான் யோசித்து வருகிறேன்.
அதன் பிறகு நியூசிலாந்து தொடர் இருக்கிறது. நான் என்னுடைய அடிப்படை விஷயங்களில் நான் கவனம் செலுத்துகிறேன். என்னுடைய கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ, அதில் தான் என்னால் கவனம் செலுத்த முடியும் என்று ஆகாஷ் தீப் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 11, 2024, 16:15 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+