For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சனின் ரசிகையாக மாறிய ஆஸ்திரேலிய வீராங்கனை அமாண்டா.. வரிசையாக வெளியிட்ட பதிவுகள்

ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்த நிலையில் அவருக்கு மிகப்பெரிய ரசிகையாக மாறி இருக்கிறார் ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை அமாண்டா வெல்லிங்டன். சஞ்சு சாம்சனுக்கு சமூக வலைதளத்தில் அதிக ஆதரவு இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் அவருடைய ரசிகையாக அவரது ஆட்டத்தை பார்த்து கொண்டாடி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமாண்டா வெல்லிங்டன் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது சஞ்சு சாம்சன் துவக்க வீரராக இறங்கியதை பார்த்து சிலாகித்த அவர், "சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு துவக்கம் அளிப்பது மிகவும் உயர்ந்த விஷயம்." என்று குறிப்பிட்டார்.

ind vs ban india sanju samson

அடுத்து சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடியதை பார்த்து மிரண்டு போனதாக, நெருப்பு படத்தை பதிவிட்டார். அதன் பின் சஞ்சு சாம்சன் வரிசையாக சிக்ஸ் அடித்ததை குறிப்பிட்ட ஒரு ரசிகர், அவர் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து இருக்கிறார் என பதிவை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த, அமாண்டா வெல்லிங்டன், "இன்னும் சஞ்சு சிக்ஸ் அடித்து முடிக்கவில்லை." என குறிப்பிட்டார்.

அமாண்டா சொன்னதைப் போலவே சஞ்சு சாம்சன் மேலும் இரண்டு சிக்ஸ் அடித்தார். ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்தார். அதன் பின் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதம் அடித்த பின் புன்னகையுடன் அதை கொண்டாடினார். அதைப் பார்த்த அமாண்டா, "இந்த புன்னகை எல்லாவற்றையும் சொல்கிறது. நம்ப முடியாத வீரர் இவர். மிகச் சிறந்த மனிதர். சஞ்சு இந்த சதத்துக்கு தகுதியானவர்." என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.

இதை அடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை அமாண்டா வெல்லிங்டன், சஞ்சு சாம்சனின் ரசிகையாகவே மாறிவிட்டார் என பலரும் அவரது பதிவுகளை பகிரத் தொடங்கினர். அமாண்டா ஆஸ்திரேலிய அணிக்காக 14 ஒரு நாள் போட்டிகளிலும், 8 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். லெக் பிரேக் சுழற் பந்துவீச்சாளரான அமாண்டா ஒரு நாள் போட்டிகளில் 18 விக்கெட்களும், டி20 போட்டிகளில் 10 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள அவர் அதில் 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Sunday, October 13, 2024, 14:52 [IST]
Other articles published on Oct 13, 2024
English summary
IND vs BAN: Amanda Wellington became a fan of Sanju Samson after his 40 ball century
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+