Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் மெகா கம்பேக்.. 2வது டெஸ்டில் எதிர்பாரா பார்ட்னர்ஷிப்..பல ட்விஸ்டுடன் முடிந்த முதல் இன்னிங்ஸ்

டாக்கா: 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரு பெரும் வீரர்கள் தரமான கம்பேக் கொடுத்ததால் வங்கதேச அணி மோசமாக சுருண்டுள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலையில் இருப்பதால் தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி சகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச் நேரம் போக போக பேட்டிங்கிற்கு மிகவும் கடினமாக மாறும் என்பதால் டாஸில் தோற்ற இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

ஆனால் அனைத்தையும் மாற்றி அமைத்தனர் இந்திய பவுலர்கள். வங்கதேச அணியின் ஓப்பனர்கள் முதல் 14 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அடித்தளம் போட்டு வந்தனர். அப்போது வந்த அஸ்வின் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவரின் சுழலில் சிக்கி டேஞ்சர் பேட்ஸ்மேனான ஹுசைன் சாண்டோ 24 ரன்களுக்கு வெளியேறினார்.

 அஸ்வின் ஸ்கெட்ச்

அஸ்வின் ஸ்கெட்ச்

இந்த முதல் விக்கெட்டிற்கு பிறகு ஒருபுறம் அஸ்வின் மற்றும் மறுபுறம் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரிடம் சிக்கி வங்கதேசம் சின்னாப்பின்னம் ஆனது. சாகீர் ஹாசன் (15 ரன்கள்), கேப்டன் சகிப் ஹல் ஹசன் (16 ரன்கள் ), முஸ்ஃபிகுர் ரஹிம் (26 ரன்கள்), லிண்டன் தாஸ் (25 ரன்கள்) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.

தனி ஒருவரின் போராட்டம்

தனி ஒருவரின் போராட்டம்

மறுமுனையில் தூண் போல நிலைத்து நின்ற மொமினுல் ஹாக்யூ இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்துக்கொண்டே வந்தார். 200 ரன்களுக்குள் வங்கதேசம் சுருண்டுவிடும் என நினைத்த போது அவர் மட்டும் சதத்தை நோக்கி சென்றுக்கொண்டே இருந்தார். எனினும் அவரை 84 ரன்களிலேயே இந்திய பவுலர்கள் மடக்கினார். இதனால் வங்கதேச அணி 227 ரன்களுக்கெல்லாம் 10 விக்கெட்களையும் இழந்தது.

பவுலிங் ரெக்கார்ட்

பவுலிங் ரெக்கார்ட்

முதல் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்த அஸ்வின், 2வது போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போல உமேஷ் யாதவும் 4 முக்கிய விக்கெட்களை எடுத்துக்கொடுத்து உதவினார். 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கம்பேக் தந்த ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பிட்ச்-ல் மாற்றம்

பிட்ச்-ல் மாற்றம்

முதலில் பேட்டிங்கிற்கு உதவியாக இருந்த பிட்ச், இன்னிங்ஸின் முடிவில் கடினமானதாக மாறியது. இன்னும் நேரம் போக போக ஸ்பின்னர்களுக்கு டேர்ன் ஆகும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக பந்தை வரவழைத்து ஆட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்

Story first published: Thursday, December 22, 2022, 15:52 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+