சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஆளாக நின்று கடுமையாக போராடி வந்தார். ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது பிரமாதமாக விளையாடி வருகிறார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரண்டு இரட்டை சதம் அடித்தார்.
9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1028 ரன்கள் குவித்துள்ளார். ஜெய்ஸ்வால் சராசரியாக 68 ரன்கள் அடித்திருக்கிறார். இப்படி அதிரடி காட்டும் ஜெய்ஸ்வால் இன்று வங்கதேசத்துக்கு எதிராக மற்ற சீனியர் வீரர்கள் தடுமாறிய போது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

களத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற ஜெய்ஸ்வால் அடிக்க வேண்டிய பந்தை மட்டுமே அடித்து ரன்களை சேர்த்தார். 118 பந்துகளை எதிர் கொண்ட ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகளை விரட்டி 56 ரன்கள் மொத்தமாக சேர்த்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மீண்டும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பந்து வீசிய வங்கதேச அணியின் புதிய வேகப்பந்துவீச்சாளர் நஹித் ரானா ஒரு யுத்தியை பயன்படுத்தினார்.
ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து அவர் ஷாட் பால்கலாக போட்டு வந்தார். ஜெய்ஸ்வாலின் நெஞ்சுக்கு மேல் பந்து எகிற்வது போல் அவர் வீசினார். இந்த பந்தை பேட்டால் தடுக்க ஜெய்ஸ்வால் முற்பட்டார். ஆட்டத்தின் 42வது ஓவரில் முதல் முறை நகித் ராணா வீசிய பந்தை ஜெய்ஸ்வால் தொட முயற்சித்த போது, அது ஸ்லீப்பில் கேட்ச் ஆகவில்லை. ஆனால் அதே ஓவரில் மீண்டும் வேகமாக ஜெய்ஸ்வால் நெஞ்சை குறி வைத்து ஷார்ட் பாலை நஹித் ரானா வீசினார்.
அதனை தடுக்க முற்பட்டபோது ஜெய்ஸ்வால் கேட்ச் ஆனார். இதன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு ஷாட் பாலில் பிரச்சனை இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் ஜெய்ஸ்வால் பெரிய அளவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் சென்னை பிட்சுக்கே ஷார்ட் பாலை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தார்.
இதனால் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் ஷார்ட் பால் சரியாக எதிர்கொள்ளாமல் போனதற்கு கம்பீர் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். பொதுவாக சாம்பியன் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்தால் அதனை சதமாகவும். சதம் அடித்தால் அதனை பெரிய சதமாக மாற்றவும் முயற்சி செய்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.