Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN- 297 ரன்கள் அடிக்கவிட்ட வங்கதேச பவுலர்களை பாராட்டிய கேப்டன்.. பாஸ் உங்களுக்கு பெரிய மனசு

மும்பை : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதனை அடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய வங்கதேச அணி 164 ரன்கள் ஆட்டம் இழந்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் வங்கதேச வீரர்கள் 18 ஓவர்கள் 10 ரன்களுக்கு மேல் வழங்கி தாராள பிரபுவாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் பவுலர்கள் இவ்வளவு மோசமாக செயல்பட்டு இருந்தால், ஒவ்வொரு கேப்டனும் கொலைவெறியில் இருந்திருப்பார்கள். ஆனால் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹசன் எங்களுடைய அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக பாராட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ind vs ban sanju samson suryakumar yadav hardik pandya

இவ்வளவு ரன்களை வாரி கொடுத்த பவுலர்களை கேப்டன் பாராட்டி இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ, இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சரியான முறையில் திட்டத்தை தீட்டவில்லை. இந்த தொடரில் எங்கள் வீரர்கள் ஒரு சில ஓவர்களை சிறப்பாக வீசினார்கள்.

ஆனால் இன்று நாங்கள் சரியாக பந்து வீசவில்லை தான். எனினும் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் இன்று நாங்கள் திட்டிய திட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களுடைய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்மால் உலகில் பெரிய அணிகளை வீழ்த்த முடியும் என்று நம்ப வேண்டும். எங்களுடைய நாட்டில் உள்ள ஆடுகளங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

எங்களுடைய வீரர்கள் அவர்களுடைய பொறுப்புகளை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். இன்றைய ஆட்டத்தில் பெரிதாய் பேட்டிங் செய்த விதம் என்னை பிரமிக்க வைத்தது என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹூசைன் சாண்டோ கூறியுள்ளார்.

நஜ்முல் ஹுசைன் தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி ரெண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற பிறகு தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் என அனைத்திலும் தோல்வி தழுவி இருக்கிறது. குறிப்பாக மூன்றாவது டி20 யில் கிட்டத்தட்ட இந்திய அணியை 300 ரன்கள் அடிக்கப்பட்டது மிகப்பெரிய ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. பௌலர்களை கண்டிக்காமல் பவுலர்கள் சிறப்பாக வீசியதாக பாராட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கேலி கிண்டலை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Sunday, October 13, 2024, 7:04 [IST]
Other articles published on Oct 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+