Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டோம்.. பாகிஸ்தானை வீழ்த்தி விடுவோம்-வங்கதேச கேப்டன்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்வோம் என்று வங்கதேச அணி தற்காலிக கேப்டன் ஜேக்கர் அலி தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அதற்கு எங்கள் அணி வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். களத்தை சரியாக கனித்து அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய திட்டத்தை மாற்றி இருக்கிறார்கள்.

Jaker ali

முதல் 10 ஓவர்களில் நாங்கள் அதிக அளவு ரன்களை கொடுத்தோம். ஆனால் அதன் பிறகு எங்களுடைய வீரர்கள் சிறப்பாக பங்கு வீசி நெருக்கடி கொடுத்தார்கள். அதற்காக என்னுடைய பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த போட்டியில் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றது.

இன்றிலிருந்து நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். நாளை வியாழக்கிழமையும் எங்களுக்கு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டி இருக்கிறது. அந்தப் போட்டியும் நாங்கள் மனதில் வைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெறுவோம் என நம்புகின்றோம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எந்த மாதிரி பேட்டிங் வரிசையை பயன்படுத்த வேண்டும். அணியில் யாரை சேர்க்க வேண்டும் எந்த காம்பினேஷன் தேவை என்பது குறித்து எல்லாம் நாங்கள் யோசிப்போம்.

நிச்சயமாக பாகிஸ்தான் எதிராக எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஜேக்கர் அலி தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணி இறுதி போட்டிக்கு சென்றுள்ள நிலையில் இரண்டாவது இடத்திற்கான போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் துபாயில் மோதுகிறது இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 24, 2025, 23:58 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+