Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: டாஸ் இழந்த சூர்யகுமார்.. முதல் பேட்டிங் செய்யும் இந்திய அணி.. பிளேயிங் லெவனில் மாற்றம்?

டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கி இருக்கிறது. டெல்லியில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ind vs ban suryakumar yadav gautam gambhir

இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து ஷான்டோ பேசுகையில், முதலில் பவுலிங் செய்யவே விரும்புகிறோம். 2வது பேட்டிங்கின் போது நிச்சயம் பனிப்பொழிவு இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் பிட்ச் சிறப்பாக உள்ளது. இதுவரை விளையாடப்பட்ட அத்தனை போட்டிகளிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்பு தான். எங்களின் பலம் என்ன என்பதை அறிந்து விளையாட முடிவு செய்துள்ளோம். முதல் 6 ஓவர்களான பவர் பிளேவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சோரிஃபுல் இஸ்லாம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷகிப் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்யவே விரும்பினோம். .முதல் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தோம். சில மைதான ஊழியர்களிடம் பேசிய போது, பனிப்பொழிவு இருக்கும் என்று கூறினர். இதனால் எங்கள் பவுலர்களுக்கு சவால் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். பனிப்பொழிவு இருக்கும் போது எப்படி செயல்படுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

ஓய்வறையில் எவ்வளவு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்ல வார்த்தைகளே கிடையாது. இதனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. அவர்களின் ஆட்டத்தை பார்த்து நிதானம் கொள்ள முடிகிறது. எனது கடமையும் எளிதாக உள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை மற்ற அணிகளை விடவும் ஒரு அடி முன்னால் இருக்க வேண்டும். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி விவரம்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்

Story first published: Wednesday, October 9, 2024, 18:52 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+