Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN : மீண்டும் ஒதுக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. டாஸை இழந்தது நல்லதே.. ரோகித் சர்மா ட்விஸ்ட்!

ஆன்டிகுவா : இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வங்கதேசம் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதிய ஐசிசி போட்டிகள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

அந்த வகையில் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் வலிமை வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து வங்கதேசம் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியிடம் வங்கதேசம் அணி தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் உள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

t20 world cup indian national cricket team cricket Virat Kohli 20 2024

இதுகுறித்து வங்கதேசம் கேப்டன் ஷான்டோ பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்புகிறோம். இந்திய அணியை சிறிய இலக்கில் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அதுதான் எங்களின் திட்டம். ஆன்டிகுவா மைதானத்தின் பிட்ச், சூழல் நன்றாக அறிவோம். அதேபோல் காற்றும் இங்கு ஆட்டத்தின் பங்கை முடியும் செய்யும்.

இந்த பிட்சில் 150 முதல் 160 ரன்கள் ரன்கள் நன்றாக ஸ்கோர். வங்கதேசம் அணியில் டஸ்கின் அஹ்மத் மட்டும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்ய விரும்பினோம். சிறந்த பிட்சாக தெரிகிறது. ஆனால் சூரிய ஒளியை பொறுத்து பிட்ச் ஸ்லோவாக மாறும்.

இந்த பிட்சை பயன்படுத்தி ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். நாங்கள் மீண்டும் அதே அணியுடன் களமிறங்கியுள்ளோம். மற்ற விஷயங்களை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் சிவம் துபே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிராஜ் ஆகியோர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆன்டிகுவா பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற பவுலிங் யூனிட்டுடன் களமிறங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, June 22, 2024, 19:58 [IST]
Other articles published on Jun 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+