For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - ராகுல், அக்சர் வேண்டாம்.. பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆஸி. வீரர்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறுகிறது. இதில் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் கே எல் ராகுல் அனுபவ வீரர் என்பதால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதே போன்று மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அஸ்வின் ஜடேஜா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த மூன்றாவது வீரர் அக்சர் பட்டேல் பிடிக்காத வீரர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹஜ், இந்திய அணியை தேர்வு செய்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் ஒரு கிரிக்கெட் வல்லுனராக இந்தியா எந்த மாதிரி பிளேயிங் லெவனில் வங்கதேசத்திற்கு எதிராக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்போகிறேன். தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்,ரோகித் சர்மா ஆகியோர் இருக்க வேண்டும்.

கில் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும். விராட் கோலி நம்பர் நான்காவது வீரராக விளையாட வேண்டும். ஜடேஜா நடுவரிசையில் ஐந்தாவது வீரராக விளையாட வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு இடது கை, வலது கை பேட்ஸ்மேன் காம்பினேஷன் எடுபடும் என்பதால் இது நல்ல முடிவாக அமையும். சர்ஃராஸ் தான் ஆறாவது வீரராகவும் ஏழாவது எதிராக ரிஷப் பண்ட் இருக்க வேண்டும்.

எட்டாவது வீரராக அஸ்வினும், ஒன்பதாவது வீரராக குல்திப் யாதவும் பத்தாவது வீரராக பும்ராவும் 11 வது வீரராக சிராஜும் விளையாட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு அணி ஆஸ்திரேலிய மண்ணிலும் சிறப்பாக செயல்படும். எனவே இது பிளேயிங் லெவனை வைத்து அவர்கள் ஆஸ்திரேலியா தொடருக்கும் தயாராக வேண்டும். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு தொடர் இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்கும்.

என்னுடைய பிளேயிங் லெவனில் கே எல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேலுக்கு இடம் இல்லை என்று பிராட் ஹஜ் கூறியுள்ளார்.இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆல்ரவுண்டர் பொறுப்பை வழங்கி அவரை பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களமிறங்க அறிவுறுத்தி இருக்கிறார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் கிடைத்து விடுவார்கள்.

மேலும் கே.எல். ராகுல் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் சர்பராஸ் கான் உள்ளூர் போட்டிகளில் பிரமாதமாக விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் வந்துவிட்டார் என்பதற்காக சர்பராஸ் கானை நீக்கிவிடக்கூடாது என்றும் பிராட் ஹஜ் அவரை தேர்வு செய்திருக்கிறார். எனினும் இது இந்திய ஆடுகளத்தில் ஏற்ற பிளேயிங் லெவனாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் பிளேயிங் லெவனை முற்றிலும் மாற்ற வேண்டிய நிலை இருக்கின்றது.

Story first published: Tuesday, September 10, 2024, 22:51 [IST]
Other articles published on Sep 10, 2024
English summary
Ind vs Ban - Bradd Hogg Predicts India Playing xi for 1st test வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - ராகுல், அக்சர் வேண்டாம்.. பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆஸி. வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+