For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரிசைகட்டும் சிக்கல்கள்.. இவர் ஒருத்தர் இருந்தா போதும்.. கேப்டன் கோலி நம்பும் இந்திய வீரர்!

கொல்கத்தா : இந்திய அணி அடுத்து ஆட உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடப்பதால் சில பிரச்சனைகளை இந்தியா சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில், கேப்டன் கோலி இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமியை தான் அதிகம் நம்பி இருக்கிறார்.

அதற்கு காரணம், அவர் சிறப்பான பார்மில் இருப்பதுடன், கொல்கத்தா அவரது சொந்த ஊர் என்பது தான். அங்கு அவரது பந்துவீச்சு இதுவரை மிக சிறப்பாக அமைந்துள்ளது.

பகல் - இரவு டெஸ்ட்

பகல் - இரவு டெஸ்ட்

இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இது முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி.

பிங்க் பந்து

பிங்க் பந்து

பகல் டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும் நிலையில், பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும். அந்த பந்து அதிக ஸ்விங் ஆகும். அதற்கேற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பேட்ஸ்மேன்கள் திணறல்

பேட்ஸ்மேன்கள் திணறல்

பிங்க் பந்துகளை அதிகம் கூர்ந்து கவனித்தால் மட்டுமே டைமிங் தவறாமல் சரியாக பேட்டிங் செய்ய முடியும். இந்திய பேட்ஸ்மேன்கள் பிங்க் நிற பந்துக்கு எதிராக பேட்டிங் செய்வதில் பயிற்சியின் போது தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.

பந்துவீச்சுக்கு சாதகம்

பந்துவீச்சுக்கு சாதகம்

அதே சமயம், இது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் 40 ஓவர்கள் வரை பந்தை அதிகமாக ஸ்விங் செய்ய முடியும் என்பதால் அவர்களுக்கு பிங்க் பந்து பெரிய அளவில் விக்கெட் வீழ்த்த கை கொடுக்கும்.

காற்றில் ஈரப்பதம்

காற்றில் ஈரப்பதம்

பகல் - இரவு டெஸ்ட் போட்டியின் மற்றொரு சிக்கல், இரவு நேரங்களில் காற்றில் இருக்கும் ஈரப்பதம். ஈடன் கார்டன் போட்டி இதை தவிர்க்க எட்டு மணிக்கே முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், நவம்பர் மாத இறுதியில் பனி அதிகம் இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்கள் இந்த சிக்கலை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்திய பந்துவீச்சு பலம்

இந்திய பந்துவீச்சு பலம்

பேட்டிங்கில் சிறந்த வீரர்கள் இருந்தாலும், பிங்க் பந்துக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியாத நிலையே உள்ளது. ஒருவேளை வங்கதேச பந்துவீச்சாளர்கள் பிங்க் பந்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அது பேட்ஸ்மேன்களை பாதிக்கக் கூடும். இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சை தான் அதிகம் நம்பி தான் இருக்கிறது.

ஷமி சிறப்பான பார்ம்

ஷமி சிறப்பான பார்ம்

அதிலும், முகமது ஷமி எதிரணியை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி வருகிறார். "செகண்டு இன்னிங்க்ஸ் ஷமி" என அடைமொழி வைத்து கூப்பிடும் அளவுக்கு இரண்டாம் இன்னிங்க்ஸில் மந்தமான ஆடுகளங்களில் கூட விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார் ஷமி.

அதிக விக்கெட்கள்

அதிக விக்கெட்கள்

முகமது ஷமி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 21 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். ஷமியின் ஸ்ட்ரைக் ரேட் 29.2 தான் இந்திய அளவில் மிகச் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

கேப்டன் நம்பிக்கை

கேப்டன் நம்பிக்கை

மேலும், கொல்கத்தா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஈடன் கார்டன் மைதானத்தில் அதிகம் ஆடியவர் ஷமி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி, ஷமியை தான் அதிகம் நம்பி இருக்கிறார் என்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

ஸ்விங் செய்வாரா?

ஸ்விங் செய்வாரா?

ஷமியை பொறுத்தவரை பந்துவீசும் தூரம், ஸ்விங் ஆகியவை தான் அவரின் முக்கிய திறனாக இருக்கிறது, குறிப்பாக, ஷமி பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தால், வங்கதேசம் நிச்சயம் நிலைகுலையும். இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும். பந்தை ஸ்விங் செய்வாரா ஷமி?

Story first published: Wednesday, November 20, 2019, 13:38 [IST]
Other articles published on Nov 20, 2019
English summary
IND vs BAN : Captain Virat Kohli rely on Mohammed Shami for Day Night test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+