Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவை காட்டி கொடுத்த ஸ்டம்ப் மைக்.. வங்கதேச போட்டியில் செய்த சூழ்ச்சி.. நடவடிக்கை பாயுமா?

ஆண்டிகுவா: 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாச படுத்தி இருக்கிறது.வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது,

இதில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

t20 world cup ind vs ban virat kohli indian national cricket team cricket 20 2024

இதன் அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா களத்தில் வியூகங்களை வகுத்து வங்கதேச வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மேலும் ஒரு கேப்டன் என்பவன் போரில் தந்திரமாக செயல்படும் படை தளபதி போல் செயல்பட வேண்டும் என்பதற்கு ரோகித் சர்மா இன்று நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தார்.

பொதுவாக சில பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க எதிரணி கேப்டன்களே வழியை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.இதன் மூலம் அந்த பேட்ஸ்மேன் அடித்தாடும் முற்பட்டு கேட்ச் ஆகி ஆட்டம் இழந்து விடுவார். இதனை தான் ரோகித் சர்மா இன்று செய்தார். வங்கதேச வீரர்கள் அடித்து ஆட முற்பட்டபோது ரன்கள் கொஞ்சம் வேகமாக வந்தது.

அப்போது இந்திய வீரர்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தார்கள். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா பவுலரிடம் அவனை அடிக்க விடு, அவன் இப்போதுதான் களத்திற்கு வந்திருக்கிறான். அவனை பெரிய ஷாட் ஆடி அவுட் ஆகி விடுவான் என்று கூறினார். ரோகித் சர்மாவின் இந்த பேச்சு ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவானது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

ரோகித் சர்மா பவுலர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாகவும் விக்கெட்டுகள் எடு, ரன் அடிக்க விடாதே என கேப்டன்கள் பவுலர்களை நெருக்கடி கொடுக்கும் இந்த காலகட்டத்தில் ரோகித் சர்மா இப்படி பேசி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ரோகித் சர்மா கணித்தது போல் வங்கதேச வீரர்கள் இன்று அடித்து ஆடி விரைவாக ஆட்டமிழந்தனர்.

ஆனால், தற்போது இது ஒரு சர்ச்சைக்கும் வித்திட்டு இருக்கிறது. வங்கதேச வீரர்களை வேண்டும் என்றே ரோகித் அடிக்க விட்டதாகவும், குறைவான ரன்களில் அந்த அணியை சுருட்ட கேப்டன் என்ற முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிலர் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த மைக் பேதிவை வைத்து ரோகித் மீது நடவடிக்கை கூட எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூதாட்டம் மேகம் கிரிக்கெட் உலகை சூழ்ந்திருக்கும் நிலையில், இது போன்ற கமெண்ட்களை ரோகித் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

Story first published: Sunday, June 23, 2024, 7:10 [IST]
Other articles published on Jun 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+