Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN ODI: அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை.. உலக அளவில் 2வது இடம்

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முகமது சமி ஒரு அபார சாதனையை படைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. இதில் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் கடுமையாக போராடி தான் ஜொலிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

துபாயில் மதிய நேரத்தில் வெப்பமும் அதிக அளவு இருக்கும். இதனால் பவுலர்களுக்கு போதாத காலமாகத்தான் இருக்கும். இதுபோன்று கடந்த 2023 50 ஓவர் உலகக் கோப்பையில் பும்ராவை விட முகமது சமி தான் அபாரமாக பந்து வீசி அதிக விக்கெட் வீழ்த்தினார்.

Champions Trophy 2025 India Vs Bangladesh Cricket 2025 vs

இந்திய அணியில் ஸ்டார் பவுலராக இருந்த முகமது சமி, அந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக வேறு எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இந்த சூழலில் கடந்த ஆண்டுதான் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் சையது முஸ்தாக் அலி தொடரில் திரும்பிய முகமது சமி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம் பேக் கொடுத்தார்.

இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இல்லாத நிலையில் ஷமி மட்டும் தான் இந்திய அணியின் பௌலிங்கை காப்பாற்ற வேண்டிய நிலையில் தள்ளப்பட்டார். இந்த சூழலில் சமி தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட சமி, சௌமியா சர்க்கார்,மெஹதி ஹஸன், ஜேக்கர் அலி தன்சின் ஹஸன், டஸ்கின் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் முகமது சமி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு மிட்செல் ஸ்டார்க் 102 போட்டுகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், சமி 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதேபோன்று பாகிஸ்தான் வீரர் ஷாக்லின் முஸ்டாக் 104 போட்டிகளிலும், நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் 107 போட்டிகளிலும் பிரட்லி 112 போட்டிகளிலும், ஆலன் டோனால்ட் 117 போட்டிகளிலும் வக்கார் யூனிஸ் 118 போட்டிகளிலும் இந்த மைல் கல்லை தொட்டு இருக்கிறார்கள். இதேபோன்று ஐசிசி 50 ஓவர் மற்றும் டி20 தொடர்களில் மொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையும் முகமது சமி படைத்திருக்கிறார்.

Story first published: Thursday, February 20, 2025, 18:13 [IST]
Other articles published on Feb 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+