Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் மேட்சிலேயே சாதனை படைத்த ஷமி.. சாம்பியன்ஸ் டிராபி, உலகக்கோப்பை ஸ்பெஷலிஸ்ட்..பவர்பிளே ரெக்கார்டு

துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக, பவர் பிளே ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்

உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Champions Trophy 2025 India Mohammed Shami 2025

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது கிடைத்த புள்ளிவிவரம் இது.

ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து): 26 விக்கெட்டுகள்

முகமது ஷமி (இந்தியா): 20 விக்கெட்டுகள்

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா): 19 விக்கெட்டுகள்

முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பந்துவீச்சாளர்களில் முகமது ஷமியின் பந்துவீச்சு சராசரி மிகவும் குறைவாக உள்ளது. இது சிறப்பான செயல்பாடு ஆகும். ட்ரெண்ட் போல்ட்டின் பந்துவீச்சு சராசரி 33.6 ஆகவும், முகமது ஷமியின் பந்துவீச்சு சராசரி 19.8 ஆகவும் உள்ளது. இதன் மூலம் ஷமி எவ்வளவு கட்டுக்கோப்பாக பந்து வீசி குறைவான ரன்களைக் கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதை அறியலாம்.

இந்த போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்றாலே முகமது ஷமி உற்சாகமடைந்து விக்கெட்டுகளை அள்ளுவார் எனக் கூறப்படும் நிலையில், அதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. ஷமி 10 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமியின் இந்த அபார பந்துவீச்சு இந்திய அணி ஆதிக்கம் செலுத்த உதவியது. அவரது சிறப்பான ஆட்டம் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Thursday, February 20, 2025, 18:25 [IST]
Other articles published on Feb 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+