Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CT 2025 புள்ளிப் பட்டியல்.. இந்திய அணி ஜெயித்தும் முதல் இடமில்லை.. பாக். செமி பைனல் வாய்ப்பு?

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வெற்றியுடன் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

IND vs BAN Champions Trophy 2025 points table India Semi final chance after Bangladesh match

பின்னர் ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இந்திய அணியின் சுப்மன் கில் சதம் (101 ரன்கள்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவு புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடி இரண்டு புள்ளிகளுடன் 0.408 என்ற நெட் ரன் ரேட்டைப் பெற்றுள்ளது.

குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணியும் இரண்டு புள்ளிகள் பெற்று இருந்தாலும் மற்றும் +1.2 நெட் ரன் ரேட்டைப் பெற்றுள்ளது. அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி இந்தப் புள்ளி பட்டியலில் இந்தியாவை தாண்டி முதல் இடத்தில் உள்ளது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தாங்கள் ஆடிய ஒரு போட்டியில் தோல்வி அடைந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் -1.2 என்பதாக, அதாவது மிக மோசமான நிலையில் உள்ளது.

இனி வரும் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, வரும் 23ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் குரூப் ஏ பிரிவில் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம். அதே சமயம் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.

வங்கதேச அணியை பொறுத்தவரை அந்த அணியின் நெட் ரன் ரேட் பாகிஸ்தானை விட சற்று அதிகமாக உள்ளது. அந்த அணி அடுத்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அதில் அந்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே வங்கதேச அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். அது மிகவும் கடினமான ஒன்று.

Story first published: Thursday, February 20, 2025, 22:48 [IST]
Other articles published on Feb 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+