Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: ரோகித், ஹர்திக் கோட்டை விட்ட 2 கேட்ச்..150 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த வங்கதேச ஜோடி

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்கை வங்கதேச அணி நிர்ணயித்துள்ளது. வங்கதேச அணி 5 விக்கெட் இழந்து தடுமாறிய போது, கேப்டன் ரோகித் சர்மா,நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கோட்டை விட்ட ஒரு கேட்ச் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்பட்டு இருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் சௌமியா சர்க்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் அடுத்தடுத்து ஓவர்களில் வெளியேறினர்.

Champions Trophy 2025 India Vs Bangladesh Cricket 2025 vs

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஹதி ஹசன் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் வங்கதேச அணி 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது இந்த சூழலில் அக்ச்சர் பட்டேல் பந்து வீச வந்தார். ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.

இதில் முஷ்பிகுர் ரஹீம், டன்ஷித் ஹசன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக வங்கதேச அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அப்போது ஹாட்ரிக் பந்தை ஜேக்கர் அலி எதிர்கொண்டார். ஆனால் அவர் டக் அவுட் ஆக இருந்தபோது ரோகித் சர்மா ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை விட்டார்.

இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை அடுத்து, ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவ்ஹீத் ஹிர்தாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அப்போது ஆட்டத்தில் இருபதாவது ஓவரிலும் இந்திய அணிக்கு விக்கெட் எடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. குல்தீப் வீசிய பந்தை ஹிர்தாய் 23 ரன்கள் எடுத்திருந்தபோது அடித்தார்.

அப்போது கைக்கு வந்த கேட்சை ஹர்திக் பாண்டியா கோட்டை விட்டார். இந்த இரண்டு வாய்ப்புகளையும் வங்கதேச வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக வங்கதேச அணி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஒரு விக்கெட்டுக்கு சேர்த்து இருக்கிறது. இதன் மூலம் சொற்ப ரன்களின் ஆட்டம் இழக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி கௌரவமான இலக்கை நோக்கி செல்கிறது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜேக்கர் அலி 68 ரன்களில் சமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அபாராமாக விளையாடிய தவ்ஹித் ஹிர்தாய் சதம் விளாசி அசத்தினார். மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காததால், வங்கதேச அணி 49.4 ஓவரில் 228 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Story first published: Thursday, February 20, 2025, 17:53 [IST]
Other articles published on Feb 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+