Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ.. இந்திய மண்ணில் சாதனைகளை உடைத்து எறிந்த வங்கதேச பவுலர்.. டேல் ஸ்டெய்னுக்கு நிகரான சாதனை

ஹசன் மஹ்மூத் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்திய மண்ணில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வங்கதேச பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் செய்துள்ளார். இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள அவர் இரண்டு முறை ஐந்து விக்கெட் அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்தி சாதனை செய்து இருக்கிறார். மற்றொரு முக்கிய சாதனையும் அவர் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் 6 விக்கெட்கள் 144 ரன்களுக்கு வீழ்ந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும் சேர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ind vs ban india bangladesh

முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் மிகச் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் என நான்கு முக்கிய விக்கெட்களை அவர் முதல் நாள் ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தார்.

அதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார். 2000 ஆவது ஆண்டுக்குப் பின் இந்த சாதனையை தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் செய்து இருந்தார். 2008ல் நடந்த அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 23 ரன்கள் விட்டுக் கொடுத்த 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அதன் பின் முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வேகப் பந்துவீச்சாளராக ஹசன் மஹ்மூத் இருக்கிறார். அவர் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பும்ரா விக்கெட்டையும் வீழ்த்தினார். முதல் இன்னிங்க்ஸில் ஹசன் மஹ்மூத் 83 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இதன் மூலமும் அவர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக முறை ஐந்து விக்கெட்டுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்து வீச்சாளர் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள ஹசன் மஹ்மூத் இரண்டு முறை 5 விக்கெட் சாதனையை செய்து இருக்கிறார். அதிலும் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இந்த சாதனையை செய்து இருக்கிறார். முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் செய்து இருந்தார்.

மேலும், இந்திய மண்ணில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். இதற்கு முன்னதாக 2019இல் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் அபு ஜாயேத் 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து ஹசன் மஹ்மூத் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

Story first published: Friday, September 20, 2024, 12:17 [IST]
Other articles published on Sep 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+